Advertisment

பள்ளியில் தேசத்துரோகக் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை

கர்நாடகாவில் சிஏஏவுக்கு எதிராக மாணவரகளைக் கொண்டு நாடகம் போட்டதாக பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தாயின் விடுதலைக்காக 9 வயது குழந்தை காத்திருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karnataka school anti-caa play, karnataka school sedition, karnataka anti caa play, கர்நாடகாவில் சிஏஏவுக்கு எதிராக நாடகம், பள்ளி தலைமை ஆசிரியை கைது, ஆசிரியர் தேசத்துரோக வழக்கில் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை, bidar students sedition case, karnataka school sedition case, anti-caa play karnataka, caa protests, Tamil indian express news

karnataka school anti-caa play, karnataka school sedition, karnataka anti caa play, கர்நாடகாவில் சிஏஏவுக்கு எதிராக நாடகம், பள்ளி தலைமை ஆசிரியை கைது, ஆசிரியர் தேசத்துரோக வழக்கில் கைது; தாயின் விடுதலைக்காக காத்திருக்கும் 9 வயது குழந்தை, bidar students sedition case, karnataka school sedition case, anti-caa play karnataka, caa protests, Tamil indian express news

அம்மா எங்கே என்று கேட்டபோது அந்த ஒன்பது வயது குழந்தை உடைந்து அழுகிறாள். ஒரு பள்ளி நாடகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 5-ம் வகுப்பு மாணவர்கள் பேசியதையடுத்து, அந்த குழந்தையின் தாய் நஜுமுனிசா தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகின்றன. மேலும், அந்த நாடகத்தில், ஆவணங்களைக் கேட்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னதாக கூறினார்.

Advertisment

நஜுமுனிசாவைத் தவிர, பள்ளித் தலைமையாசிரியர் ஃபரீதா பேகத்தையும் தேசத்துரோக குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். நஜுமுனிசாவின் மகள் செருப்பால் அடிப்பேன் என்று கூறியதற்கு ஆதாரமாக போலீசார் ஒரு மாணவன் வைத்திருந்த செருப்புகளை கைப்பற்றியுள்ளனர்.

இருவரும் கைது செய்யப்பட்டதில் இருந்து, ஷாஹீன் உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களைக் கேள்வி கேட்பதற்காக போலீசார் தினமும் வருகின்றனர். அப்படி மாணவர்களிடம் கேள்வி கேட்கும்போது பெற்றோர்கள் உடன் இருப்பதை உறுதி செய்ய அவர்களும் தினமும் பள்ளிக்கு வருகின்றனர்.

இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து ஜனவரி 31-ம் தேதி டி.ஸ்ரீதரா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர். திங்கள்கிழமை டி.என்.நாகேஷ் பிடர் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார்.

நஜுமுனிசாவின் மகள் அழுகைக்கு இடையே ‘பாபி’ என்று சிறையில் நஜுமுனிசாவை கவனித்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய நில உரிமையாளரின் மனைவியைக் குறிப்பிடுகிறார்.

பிடர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 வயதான நஜுமுனிசா, வாட்ஸ்அப் இல்லாத தொலைபேசியில் பேசுகையில், சி.ஏ.ஏ அல்லது குடிமக்களின் தேசிய பதிவேடு பற்றி தொலைக்காட்சியில் கேட்டதைத் தவிர, வேறு ஒருவரின் மொபைலில் ஒரு முறை பார்த்ததாகவும் அதைப் பற்றி தனக்கு அதிகம் தெரியாது என்றும் கூறினார்.

இந்தச் சட்டம் தொடர்பாக ஒரு நாடகத்தைத் உருவாக்க மற்ற ஆறு மாணவர்களுடன் அவரது மகள் பள்ளியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஒன்பது வயது குழந்தை தொலைக்காட்சியில் கேட்டதை மீண்டும் செய்ய முடிவு செய்ததாக நஜுமுனிசா கூறினார்.

நாடகத்தின் பிரதியை உருவாக்கிய அவரது தாயார் என்று 5-ம் வகுப்பு மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நஜுமுனிசா கைது செய்யப்பட்டார். அதில், அவர்கள் நாடகம் தொடங்குவதற்கு சற்று முன்பு நஜுமுனிசா அவரது மகள் உள்ளிட்டோரிடம் “செருப்பால் அடி” என்று பலமுறை கூறியதாக கூறியுள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஃபரீதா பேகம் (52) அந்த பெண் என்ன சொல்ல திட்டமிட்டாள் என்று தனக்கு தெரியாது என்று கூறினார். “சிஏஏ பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்க நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம். ஒரு விரிவான அவுட்லைன் கொடுத்த பிறகு, ஏழு மாணவர்களுக்கு அவர்களுடைய ஸ்கிரிப்ட்களைத் தயாரிக்க விட்டுவிட்டேன். நஜுமுனிசா என்ன தயாரித்தார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

அரசு உதவி பெறும் ஷாஹீன் உருது தொடக்கப்பள்ளியில் 254 மாணவர்கள் உள்ளனர். ஷாஹீன் குழும நிறுவனங்கள் மற்றும் அல்லாமா இக்பால் கல்விச் சங்கம் 13 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளன. தலைமை நிர்வாக அதிகாரி தவ்சீஃப் மதிகேரி கூறுகையில், ஷாஹீன் ஆங்கில தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி, பிடரில் உள்ள ஜூனியர் கல்லூரி கிளைகள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 45 சதவீதம் பேர் இந்துக்கள்” என்று கூறினார்.

10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக உள்ள ஃபரீதா பேகம் கூறுகையில், “எனக்குத் தெரிந்திருந்தால் அந்த வரிகளை நான் சொல்லியிருக்க மாட்டேன். நான் நாடகத்தின் பொறுப்பாளராக இருந்ததால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

இரு குழந்தைகளின் தாயான இவருடைய கணவர் ஒரு மெக்கானிக். ஃபரீதாவின் கைதைத் தொடர்ந்து விரைவிலேயே அவர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நாடகம் ஜனவரி 21-ம் தேதி அரங்கேறியது. இது சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பின்னர், சமூக சேவகர் நீலேஷ் ரக்‌ஷால் ஜனவரி 26-ம் தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 30-ம் தேதி கைது செய்யப்பட்டார்கள்.

நஜுமுனிசாவும் அவரது மகளும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மாவட்டத்தில் உள்ள ஹும்னாபாத்தில் உள்ள தொலைதூர கிராமமான ஹல்லிகேடில் இருந்து பிடருக்கு குடிபெயர்ந்தனர்.

நஜுமுனிசாவின் கணவர் எம்.அய்ஜாசுதீன். விவசாயியான இவர், அவருடைய மூன்று ஏக்கர் நிலத்தையும் ஒரு கைக்குழந்தையும் விட்டுவிட்டு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நஜுமுனிசா, “நிலத்தை ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000-க்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்கு உதவியாக வேலையை வாங்கிக்கொண்ட பிறகு நான் அங்கே சென்றேன்” என்றார். அதோடு, தான் படிப்பறிவற்றவள் என்றும் இந்த இடப்பெயர்வு தனது மகள் நல்ல கல்வியைப் பெற உதவும் என்று நம்பியதாகக் கூறினார்.

ஷாஹீன் உருது பள்ளி இயல்பான தேர்வாக இருந்தது. முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகத்தில் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஷாஹீன் குழுமத்தால் நடத்தப்படும் நிறுவனங்களில் படிக்கின்றனர். மேலும் பலர் உதவித்தொகை அல்லது கட்டண தள்ளுபடியைப் பெறுகின்றனர்.

சொசைட்டி 12 ஆம் வகுப்புடன் ஒருங்கிணைந்த மிகவும் வெற்றிகரமான நீட் தேர்வு பயிற்சி திட்டத்தை நடத்துகிறது. அதில் 327 மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தலைமை நிர்வாக அதிகாரி மதிகேரி கூறுகையில், “எங்களுக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் முஸ்லிம்களை விட இந்துக்கள் அதிகம். போலிஸ் மீதான அரசியல் அழுத்தம் காரணமாக, இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று கூறினார்.

மாணவர்களை போலிசார் விசாரிப்பது குறித்து கேள்வி எழுப்பிய பள்ளி அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவர்கள் நாடகத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும், அதைப் பார்த்தவர்களையும் தனியாக ஒதுக்கி வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் எந்த ஆசிரியரையும் நிர்வாக அதிகாரியையும் ஆஜராக அனுமதிக்க மாட்டார்கள். மாணவர்கள் பயப்படுகிறார்கள்” என்று கூறினார்.

டி.எஸ்.பி.பஸ்வேஷ்வர் ஹிரா தலைமையிலான விசாரணைக் குழு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வியாழக்கிழமை 45 நிமிடங்களும் வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரமும் விசாரித்தது. சனிக்கிழமை 60-70 நிமிடங்கள் மாணவர்களை கேள்வி எழுப்பியுள்ளனர். திங்கள் கிழமை ஒரு மணி நேரம் செலவிட்டு கேள்வி கேட்டனர். பள்ளியில் உள்ள சி.சி.டி.வி மற்றும் பிற பதிவுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கேட்டதற்கு, டி.எஸ்.பி. ஹிரா கூறுகையில், “உங்களிடம் ஏதாவது பகிர்ந்து கொள்ளும்போது, ​​அதை அறிவிப்போம்” என்றார்.

வழக்கு பதிவு செய்துள்ள நியூ டவுன் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் “சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் பற்றி தவறான தகவல்களை பரப்புவதில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தார்களா என விசாரிக்கின்றனர் என்று கூறினர். “ஆசிரியர்கள் ஒரு தவறான தகவலை பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளதாகவு அதில் இந்த நாடகம் ஒரு பகுதி என்று மாணவர்களிடம் இருந்து எங்களுக்கு தெரியவந்தது” என்று ஒரு அதிகாரி கூறினார்.

நாடகத்தில் பங்கேற்றவர்கள் யார்; நாடகப் பிரதியை எழுதியவர் யார்; ஆசிரியர்கள்,

சிஏஏ-வுக்கும், மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் எதிராகப் பேசச் சொன்னார்களா? ஆசிரியர்கள், அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டாம் என்று பெற்றோரை வற்புருத்தினார்களா சொன்னார்களா என்பது போன்ற கேள்விகளை போலீசார் மாணவர்களிடம் கேட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அந்த நாடகத்தின் ஒரு பகுதியாக இருந்த மகளின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், “டெல்லியில், ஒரு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும் என்று கூறுகிறார். அவரை விட்டுவிடுகிறார்கள். குண்டர்கள் ஜே.என்.யுவில் நுழைந்து மாணவர்களை அடிக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், ஒரு ஐந்தாம் வகுப்பு சிறுமி, ஆவணங்களை யாராவது கேட்டால் செருப்பால் அடிப்போம் என்று கூறியதாக எல்லாம் போய்விட்டது என்று கைது செய்யப்படுகிறார்கள்” என்பது பற்றி ஆச்சரியப்படுதாகத் தெரிவித்தார்.

மற்றொரு பெற்றோர் கூறுகையில், “இது எப்படி தேசத்துரோகம் என்று எனக்குப் புரியவில்லை. சிஏஏ பற்றி 9-10 வயதுடையவர்ள் பேசுவதில் என்ன தேச விரோதம் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

Karnataka Karnataka State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment