தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த பயணிக்கு டெல்டா அல்லாமல் வேறு வகை கொரோனா

Traveller from S. Africa infected with variant different from Delta: Karnataka health minister: பெங்களூருவில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரு பயணிகளில் ஒருவருக்கு டெல்டாவிலிருந்து வேறுபட்ட மாறுபாடு இருப்பதாக கர்நாடக அமைச்சர் தகவல்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டினர் பெங்களூருக்கு வந்தவுடன் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது, தற்போது இருவரில் குறைந்தபட்சம் ஒருவராவது “டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்ட மாறுபாடு” மூலம் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.கே.சுதாகர் கூறியுள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம், வெளிநாட்டினருக்கு கண்டறியப்பட்ட மாறுபாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

“ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிவது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு மாறுபாட்டால் சுமார் 63 வயதுடைய ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஐசிஎம்ஆருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது, இன்று மாலைக்குள் தெளிவு கிடைக்கும்” என்று அமைச்சர் சுதாகர் கூறினார்.

வெள்ளிக்கிழமை, பெங்களூரு மாவட்ட அதிகாரிகள் இரண்டு பயணிகளும் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்ட புதிய ஓமிக்ரான் மாறுபாடு அல்ல என்றும் கூறியிருந்தனர்.

மேலும், “தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள சக பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் பேசினேன். புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், இது வேகமாகப் பரவுகிறது, ஆனால் டெல்டா மாறுபாட்டைப் போல வைரஸ் இல்லை என்றும் நோயின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும் கூறுவது உறுதியளிக்கும் காரணிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் சுதாகர் கூறினார்.

“அறிகுறிகளில் குமட்டல், அதிக இதய துடிப்பு விகிதங்கள் போன்றவை அடங்கும் மற்றும் முந்தைய வகைகளைப் போலல்லாமல், சுவை மற்றும் வாசனை இழப்பு அறிகுறிகள் கூறப்படவில்லை. சோர்வு உள்ளது ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் ICU சிகிச்சை தேவை குறைவாக உள்ளது. இதுதான், கடந்த 15 நாட்களாக புதிய மாறுபாட்டின் மூலம் ஏற்பட்ட நோய்த்தொற்று அனுபவத்தைப் பற்றி எனது நண்பர்களாக இருக்கும் டாக்டர்கள் கூறுவது,” என்று டாக்டர் சுதாகர் கூறினார்.

கடந்த 10 முதல் 15 நாட்களில் கர்நாடகாவிற்கு வந்த அனைத்து பயணிகளும் கடந்த இரண்டு நாட்களாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“புதிய மாறுபாடு மற்றும் அதன் பண்புகள் மற்றும் வடிவங்கள் குறித்து டிசம்பர் 1ஆம் தேதிக்குள் அறிக்கையைப் பெறுவோம். சமீபத்திய தகவலின்படி, இந்த மாறுபாடு 12 வெவ்வேறு நாடுகளில் காணப்பட்டுள்ளது, மேலும் இந்த நாடுகளில் இருந்து வந்துள்ள சர்வதேச பயணிகளும் கண்காணிக்கப்பட வேண்டும், ”என்று அமைச்சர் கூறினார்.

“மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில சுகாதார அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க செவ்வாய்கிழமை நடைபெறும் கூட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இருப்பார்கள்” என்று டாக்டர் சுதாகர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karnataka south africa travellers delta omicron

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com