சாலை தடுப்பின் மீது கார் எதிர்பாரதவிதமாக மோதிய விபத்தில், 10 பேர் பலியாகியிருந்த நிலையில், இவர்கள் கார் மீது மற்றொரு கார் மோதியதில் அதில் பயணம் செய்த 3 பேர் என, ஒரே நேரத்தில் 13 பேர் பலியான சம்பவம், தும்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் அருகே சாலையோரத்தில் கார் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள், கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பினர். அப்போது, அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். பின்னால் வந்த கார் இந்த கார் மீது மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயம் : படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.
போலீஸ் விசாரணை : தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து தொரடர்பாக, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.