கர்நாடகாவில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தீ வைத்து எரிப்பு

Karnataka: Woman set ablaze for resisting rape, dies: கர்நாடகாவில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தீ வைத்து எரிப்பு; குற்றவாளி கைது

கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கற்பழிப்பு முயற்சியை எதிர்த்ததால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில் அந்த பெண் இறந்துள்ளார், பாதிக்கப்பட்டவருக்கு 95% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட கங்கப்ப பசப்பா அரலல்லி (25) மற்றும் பாதிக்கப்பட்ட பெண் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். போலீஸ் வட்டாரங்களின்படி, கங்கப்பா அந்தப் பெண்ணுடன் உறவு கொள்ள சில காலமாக முயன்று வந்துள்ளார். ஆனால் பல சமயங்களில் அந்தப்பெண் அவருடைய விருப்பத்தை நிராகரித்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில், பாதிக்கப்பட்ட பெண் தூங்கிக்கொண்டிருந்தபோது அவளது வீட்டிற்குள் நுழைந்து கங்கப்பா அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​கங்கப்பா வெளியே சென்று தனது பைக்கில் இருந்து பெட்ரோலைச் எடுத்து வந்து அந்த பெண்ணின் மீது ஊற்றினார். அந்த பெண்ணை தீ வைத்து எரித்த கங்கப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த பெண் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கலபுர்கியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இருப்பினும் மாலையில் அவர் இறந்தார். தாக்குதல் நடந்த பல மணிநேரங்களுக்குப் பிறகே அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து சூரபுரா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து கங்கப்பாவை கைது செய்துள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “கங்கப்பா ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்து அதே கிராமத்தில் வசித்து வருவதாக.” கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் மரண வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார், என்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

முன்னதாக அந்த பெண், கங்கப்பா தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியதாகவும், ஊர் பஞ்சாயத்து இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு ‘சமரசத்திற்கு’ வருவதற்காக பல கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார். மேலும் “காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்,” என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.

பெண்ணின் மரணம் பற்றிய செய்தி பரவியதை அடுத்து, பல தலித் அமைப்புகள் மாவட்டத்தில் போராட்டங்களை நடத்தின. பாதிக்கப்பட்டவர் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர், குற்றவாளி ஒரு பட்டியல் பழங்குடி குழுவைச் சேர்ந்தவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karnataka woman set ablaze rape dies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com