Advertisment

கர்நாடக எழுத்தாளர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதிய நபர் கைது; போலீசில் சிக்கியது எப்படி?

கர்நாடக எழுத்தாளர்களுக்கு பல மிரட்டல் கடிதங்கள் எழுதியதாக சிவாஜி ராவ் ஜாதவ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
karnataka

கர்நாடக எழுத்தாளர்களுக்கு பல மிரட்டல் கடிதங்கள் எழுதிய இந்து அமைப்பு நிர்வாகி கைது

கர்நாடக எழுத்தாளர்களுக்கு பல மிரட்டல் கடிதங்கள் எழுதியதாக சிவாஜி ராவ் ஜாதவ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மாண்டியாவில் இருந்து அவர் அனுப்பிய கடிதம்தான் அவரைப் பிடிப்பதற்கு துப்பு கொடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Advertisment

கிட்டத்தட்ட 2 ஆண்டு தீவிர தேடுதலை முடிவுக்குக் கொண்டு வர, கடிதம் அனுப்பப்பட்ட உறையின் மேல் வலது மூலையில் ஒரு போஸ்ட்மார்க் மட்டும் போதுமானதாக இருந்தது.

ஆங்கிலத்தில் படிக்க: How a postmark led police to a writer of threatening letters

கடந்த இரண்டு ஆண்டுகளாக கன்னட இலக்கியப் பிரபலங்களுக்கு பல கடிதங்களை அனுப்பியதற்காக சிவாஜி ராவ் ஜாதவ் செப்டம்பர் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு தெற்கு கர்நாடக தபால் நிலையத்திலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் சிவாஜி ராவ் ஜாதவ்வை கைது செய்ய வழிவகுத்தது.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய, 41 வயதான சிவாஜி ராவ் ஜாதவ், எழுத்தாளர்கள் தேச விரோதிகள் என்றும், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மத்திய கர்நாடகாவில் உள்ள சங்பரிவார் துணை அமைப்பான ஹிந்து ஜகரனா வேதிகேயின் இணை ஒருங்கிணைப்பாளரான சிவாஜி ராவ் ஜாதவ், தாவங்கரேயில் உள்ள ஒரு அச்சகத்தில் பைண்டிங் பிரிவில் பணிபுரிந்தார்.

2022-ம் ஆண்டு முதல், கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்கள்  தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜயநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் கும் வீரபத்ரப்பா, சித்ரதுர்கா லேஅவுட் காவல் நிலையத்தில் பி.எல்.வேணு , சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் பி.டி. லலிதா நாயக் தலா ஒன்று, ராமநகராவில் உள்ள ஹரோஹள்ளி காவல் நிலையத்தில் பஞ்சாகெரே ஜெயபிரகாஷ், பெங்களூரில் உள்ள பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில் வசுந்தரா பூபதி தலா இரண்டு உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில எழுத்தாளர்களுக்கு பல மிரட்டல் கடிதங்கள் வந்தன - வீரபத்ரப்பாவின் வீட்டிற்கு 19 கடிதங்கள் அனுப்பப்பட்டன, நாயக்கிற்கு மூன்று கடிதங்கள் வந்தன.

விஜயநகர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் எழுத்தாளர் கும் வீரபத்ரப்பா புகார் அளித்தார். அவரது வீட்டுக்கு 19 மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விக்கிபீடியா எழுத்தாளர் கும் வீரபத்ரப்பா விஜயநகர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது வீட்டுக்கு 19 மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த மிரட்டல் கடிதங்கள் அனைத்தும் “சஹிஷ்ணு இந்து (சகிப்புத்தன்மையுள்ள இந்து) ” ஒருவரால் எழுதப்பட்டவை என்பது காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இந்த கடிதங்களில் ஒரே கையெழுத்து இருந்தது. அவைகள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் இருந்து காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க அனுப்பப்பட்டுள்ளன” என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா செப்டம்பர் 30-ம் தேதி ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் போலீசாரால் பிடிக்க முடியவில்லை என்றாலும், இந்த கடிதங்கள் எழுத்தாளர்களுக்கு பல்வேறு தபால் நிலையங்களில் இருந்து அனுப்பப்பட்டவை என்று அவர்கள் அடையாளம் கண்டனர். இந்த கடிதங்கள் அனுப்பப்பட்ட நாளில் இந்த தபால் நிலையங்களுக்கு அருகில் செயல்பட்ட செல்போன்களின் தரவுகளையும் போலீசார் பெற்றுள்ளனர். தபால் நிலைய பிராந்தியத்தில் ஏற்பட்ட வழக்கத்டிற்கு மாறான ஒரு நிகழ்வு அவர்களை ஜாதவ்வை நோக்கி அழைத்துச் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய கர்நாடகாவின் தாவங்கரே, சித்ரதுர்கா, ரானேபென்னூர் மற்றும் ஷிவமொக்கா ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து பெரும்பாலான மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஒரு கடிதம் தெற்கு கர்நாடகாவின் மாண்டியாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.

“மண்டியாவில் உள்ள பாண்டவபுராவில் உள்ள கியாத்தனஹள்ளி கிராமத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது, இது இந்துத்துவா நடவடிக்கைகள் அதிகம் காணப்படாத பகுதி. கடந்த ஆண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட நேரத்தில் இந்து ஜகரனா வேதிகே கூட்டம் இப்பகுதியில் நடத்தப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்தோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

மாண்டியா நிகழ்வின் மீதான விசாரணையில், 200 பங்கேற்பாளர்களில் ஒரு சிலரே மத்திய கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது - இது கிட்டத்தட்ட எல்லா மிரட்டல் கடிதங்களும் அனுப்பப்பட்ட பிராந்தியமாக இருந்தது. இந்த பங்கேற்பாளர்களின் தொலைபேசி தரவுகளை பெற்ற போலீசார், மத்திய கர்நாடக தபால் நிலையங்களில் முந்தைய மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நாட்களில் செயலில் உள்ள மொபைல்களின் பதிவுகளும் அவர் சென்ற குறிப்புகளையும் அளித்தன. இது ஜாதவ் மீது காவல் துறை கவனம் செலுத்த உதவியது.

“ஒரு தபால் நிலையத்தில் இருந்து சி.சி.டிவி காட்சிகள் இருந்தன. ஆனால், மாண்டியா நிகழ்வின் முன்னணி உருவாகும் வரை அந்த நபரின் அடையாளத்தை உறுதி செய்ய வழி இல்லை” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவாஜி ராவ் ஜாதவின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 28-ம் தேதி அவரை தாவாங்கேரிலிருந்து போலீசார் அழைத்துச் சென்றனர். செப்டம்பர் 29-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

“சிவாஜி ராவ் ஜாதவ் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சகத்தின் பைண்டிங் பிரிவில் பணிபுரிந்த இவர் திருமணமாகாதவர். இவர் ஒரு தீவிர வாசகர், மேலும் ஊடகங்களில் தோன்றும் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் அறிக்கைகள் மற்றும் மேற்கோள்களைத் தொடர்ந்து வாசித்து வந்துள்ளார். இவர் இந்து விரோதிகளாகக் கருதும் எழுத்தாளர்களை மனதளவில் துன்புறுத்த விரும்பினார்” என்று வட்டாரங்கள்  தெரிவித்தன.

சிவாஜி ராவ் ஜாதவ் கைது செய்யப்பட்டதும், அவர் டஜன் கணக்கான மிரட்டல் கடிதங்களை எழுதியதை ஒப்புக்கொண்டார். மேலும், இந்த மிரட்டல் கடிதங்களை எழுதியதில் தானே செயல்பட்டதாகக் கூறினார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவாஜி ராவ் ஜாதவ், எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்த்து அவர்களின் முகவரிகள் கிடைக்கும் என்பதற்காக  பொது நூலகங்களுக்குச் சென்று வந்துள்ளர். எழுத்தாளர்களின் முகவரிகள் புத்தகங்களில் அச்சிடப்படுவது வழக்கம் என்று போலீசார் தெரிவித்தனர். அனைத்து மிரட்டல் கடிதங்களையும் கன்னடத்தில் எழுதிய சிவாஜி ராவ் ஜாதவ், தான் குறி வைத்தவர்களை  “இந்தியாவுக்கு எதிரானவர்கள், தேச விரோதிகள், துரோகிகள்” என்று அழைத்தார்.

ஜூலை 2, 2022-ல் தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் புகாரில், முன்னாள் மாநில அமைச்சர், செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் 78 வயதான நாயக், தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் 61 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

நாயக்கிற்கு எழுதிய கடிதம், 2019-2022 வரையிலான முந்தைய பா.ஜ.க அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தேசப்பற்று, தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய பாடங்களை தவறாக கேள்வி எழுப்பியதாக எழுத்தாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் குற்றம் சாட்டுகிறது. அந்த கடிதங்கள், இந்த எழுத்தாளர்கள் தேச விரோத சக்திகளுடன் இணைந்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டியது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் எஸ்.டி.பி.ஐ போன்ற குழுக்களின் நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டதாக நாயக்கிற்கு எழுதிய நான்கு பக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  “நாயக் எதிர்காலத்தில் தேச விரோத நிகழ்வுகளில் கலந்து கொண்டால், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்று அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சய்நகர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கிரிமினல் மிரட்டல் மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த மிரட்டல் கடிதங்கள் எழுதிய ஜாதவின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு, செப்டம்பர் 28-ம் தேதி தாவங்கேரிலிருந்து போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அவர் செப்டம்பர் 29-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக எழுத்தாளர்கள் முதல்வர் சித்தராமையாவை அணுகியதையடுத்து, மாநில காவல்துறைத் தலைவர் அலோக் மோகனின் உத்தரவின் பேரில் பெங்களூரு போலீஸார் ஆகஸ்ட் மாதம் குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தனர்.

“இந்த அச்சுறுத்தல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், கவுரி லங்கேஷ் மற்றும் எம்.எம். கல்புர்கி எதிர்கொண்ட நிலைமை மீண்டும் ஏற்படலாம்” என்று எழுத்தாளர்கள் முதல்வர் சித்தராமையாவிடம் கூறியுள்ளனர்.

செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் (55), பேராசிரியர் கல்புர்கி (77) கர்நாடகாவில் ஆகஸ்ட் 2015 மற்றும் செப்டம்பர் 2017-ல் ஒரு தீவிர வலதுசாரி இந்துத்துவா குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment