பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் சிறுமியை துன்புறுத்தியதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரில், தனது மகள் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் நீதி கேட்டும், சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்கக் கோரியும் பிப்ரவரி 2-ம் தேதி எடியூரப்பாவின் வீட்டிற்கு அந்தப் பெண் சென்றார்.
எடியூரப்பா சிறுமியை அறைக்குள் கூட்டிச் சென்று கதவை மூடினார். 5 நிமிடங்கள் கதவு திறக்கப்படவில்லை. அவர் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, எஃப்ஐஆர், கூறுகிறது.
கதவை திறந்து வெளியே வந்ததும், ஏன் இப்படி செய்தீர்கள் என்று எடியூரப்பாவிடம் கேட்டபோது அவர், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இல்லையா என்பதை சோதித்ததாக கூறியதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் எஃப்ஐஆரில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிஎஸ் எடியூரப்பா, பின்னர் மன்னிப்பு கேட்டதாகவும், இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த புகாரை அடுத்து சதாசிவநகர் போலீஸார் எடியூரப்பா மீது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் பிரிவு 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 (ஏ) (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Read in English: Former Karnataka CM B S Yediyurappa booked under POCSO for ‘sexually harassing minor’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“