Advertisment

கார்த்தி சிதம்பரத்திற்கு ஒரு நாள் சிபிஐ காவல் : டெல்லி நீதிமன்றம் உத்தரவு

கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுக்க சிபிஐ காரசாரமாக வாதிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivagangai seat denied to karthi p.chidambaram- கார்த்தி ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி

sivagangai seat denied to karthi p.chidambaram- கார்த்தி ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி

கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுக்க சிபிஐ தரப்பில் காரசாரமாக வாதிடப்பட்டது.

Advertisment

கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன்! 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடு வந்தது. இதற்காக சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற மேற்படி நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அந்த உதவிக்கு 10 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.

கார்த்தி சிதம்பரத்திடம் ஏற்கனவே இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியன விசாரணை நடத்தின. அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனையும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைத்த அடுத்த நாளே கார்த்தியை சிபிஐ வளைத்திருக்கிறது.

லண்டனில் இருந்து இன்று காலை (புதன்கிழமை) சென்னை வந்து இறங்கிய கார்த்தி சிதம்பரத்தை, விமான நிலையத்திலேயே வளைத்து கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள். இன்று மாலை 5 மணிக்கு அவரை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இது தொடர்பான LIVE UPDATES

இரவு 7.35 : கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சிபிஐ காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்த்தி சிதம்பரத்தை வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இரவு 7.00 : முன்னதாக ஐ.என்.எக்ஸ். மீடியா உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி, ‘வெளிநாட்டு முதலீடு கிளியரன்ஸுக்காக கார்த்தி சிதம்பரம் ஒரு மில்லியன் டாலர் கேட்டதாக’ வாக்குமூலம் கொடுத்திருந்ததை சிபிஐ சுட்டிக்காட்டியது. அதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க காவலுக்கு அனுமதி கோரியது சிபிஐ.

மாலை 6.00 : ‘ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்படும் அட்வாண்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் லிமிடெட் நிறுவனத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு கிடையாது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு கார்த்தி உரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்’ என வாதிட்டார் அபிஷேக் மனு சிங்வி.

மாலை 5.45 : கார்த்தி சிதம்பரம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த அரசு தூண்டுதல் அடிப்படையில் நடந்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக அவருக்கு ஒரு சம்மன்கூட வழங்கப்படவில்லை. எனவே கார்த்தி சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தவறானது.’ என்றார்.

தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வி, ‘நான் இந்துஸ்தான் லீவர் இல்லை (இந்தியாவை விட்டு ஓடிப் போகிறவர் இல்லை என்பதை அப்படி கூறினார்). இந்தியாவில் வந்து இறங்கிய இடத்தில் என்னை கைது செய்தார்கள்’ என கார்த்தி சிதம்பரத்தின் வார்த்தைகளை நீதிமன்றத்தில் பதிவு செய்தார் சிங்வி.

மாலை 5.18 : கார்த்தி சிதம்பரம், டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் சுமீத் ஆனந்த் முன்பு ஆஜர் செய்யப்பட்டார். கார்த்தி சிதம்பரம் அவரது வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க மாஜிஸ்திரேட் அனுமதி கொடுத்தார். கார்த்தி சிதம்பரம் சிபிஐ வசம் இருக்கும் ஆதாரங்களுக்கு முரணாக மழுப்பலான பதில்களை சொல்வதாகவும், 15 நாட்கள் அவரை காவலில் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சிபிஐ கோரியது.

மாலை 5.03: கார்த்தி சிதம்பரம், சிபிஐ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

மாலை 5.00 : கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமன் பிப்ரவரி 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு பிறகு அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

 

Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment