Advertisment

தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் - கருணாநிதி

1999 தொடங்கி 2004ம் ஆண்டு வரையிலான ஆட்சியின் போது பாஜகவிற்கு திமுக ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாஜ்பாய் கவலைக்கிடம்

வாஜ்பாய் பற்றி கலைஞரின் கருத்து

Atal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

முன்னர் வந்த செய்தி கீழே:

வாஜ்பாய் கவலைக்கிடம் : இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை மோசமான நிலையில் இருக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள்.

வாஜ்பாய் உடல்நிலைப் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ள

வாஜ்பாய் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சிப் பணியினை அனைத்துக் கட்சித் தலைவர்களும் புகழ்ந்து வருகிறார்கள். பாஜக மற்றும் திமுக ஆகிய இருக்கட்சிகளும் வெவ்வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்திருக்கிறார்கள்.

வாஜ்பாய் கவலைக்கிடம் : வாஜ்பாய் பற்றி கருணாநிதியின் கருத்து

1999 தொடங்கி 2004ம் ஆண்டு வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் இந்தியாவில் ஆட்சி அமையும் போது அதற்கு முழு ஆதரவினையும் அளித்தார் கலைஞர் கருணாநிதி.

அச்சமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார். அவரைப் பற்றி கருணாநிதி குறிப்பிடுகையில் “வாஜ்பாய் மிகவும் உயர்வான மனிதர் ஆனால் தவறான சித்தாந்தம் கொண்ட கட்சியில் இருக்கிறார்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் தலைவர்கள் பற்றிய செய்தியைப் படிக்க 

முரசொலி மாறன் அவர்களின் மறைவுக்குப் பின்னால் திமுக கட்சியானது ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment