காஷி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க ஓட்டத்தில் பூஜை இடமாக ஒதுக்கப்பட்ட ஒரு பக்க-மேல் பெர்த் நிரந்தரமானது இல்லை என்று இந்திய ரயில்வே திங்கள்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
காஷி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க ஓட்டத்தின்போது ஒரு பெட்டியில் உள்ள மேல் பெர்த்தில் இந்து கடவுள்களின் படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது ரயிலில் நிரந்தரமாக இருக்கும் என்று ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சையானது இதனைத் தொடர்ந்து, ரயில் தொடக்க ஓட்டத்தின்போது பூஜை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட அந்த பெர்த் ரயிலில் நிரந்தரமானது இல்லை என்று இந்திய ரயில்வே திங்கள்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய காஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஊழியர்கள் ரயிலின் மேல் பெர்த்தில் பூஜை செய்வதற்காகவும் இந்த புதிய புராஜக்ட் வெற்றியடைவதற்காகவும் வேண்டி தற்காலிகமாக ஸ்ரீ மஹாகால் புகைப்படங்களை வைத்தனர். இது தொடக்க ஓட்டத்திற்கு ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தொடக்க ஓட்டம் பயணிகளுக்கு திறக்கப்படவில்லை. 2020 பிப்ரவரி 20 முதல் தொடங்கும் ரயிலின் வணிக ரீதியான ஓட்டத்தில் பூஜை நோக்கத்திற்காக அப்படி ஒதுக்கப்பட்ட அல்லது அர்ப்பணிக்கப்பட்ட பெர்த் எதுவும் இருக்காது” என்று ஐஆர்சிடிசி கூறியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-17T223148.061-300x200.jpg)
ஞாயிற்றுக்கிழமை, இந்த ரயிலில் பி5 பெட்டியில் இருக்கை எண் 64-ல் இந்து கடவுள்களின் படங்கள், தூபக் குச்சிகள், பூக்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த செயலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அரசியல் அமைப்பின் முன்னுரையின் புகைப்படத்தை டுவிட் செய்து பிரதமர் அலுவலகத்துக்கு குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் தனது தொகுதியில் இருந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட புதிய திட்டங்களின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் மத கருப்பொருள் கொண்ட ரயிலை இயக்கியது. இது இந்தூருக்கு அருகிலுள்ள ஓம்கரேஷ்வர், உஜ்ஜைனில் மகாகலேஷ்வர் மற்றும் வாரணாசியில் காஷி விஸ்வநாத் ஆகிய மூன்று ஜோதிர்லிங்கங்களை இணைக்கிறது.
இரண்டு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பிறகு இயக்கப்படும் அதுபோன்ற மூன்றாவது கார்ப்பரேட் ரயில் இது. சிவன் கருப்பொருள் கொண்ட இந்த ரயிலைத் தொடர்ந்து ராமாயண கருப்பொருள் கொண்ட ரயில் அடுத்த மாதம் இந்தியா முழுவதும் இருந்து பெரிய அளவில் இயக்கப்படும். இது இந்திய ரயில்வேயின் மத சுற்றுலா பிரிவில் முக்கிய அழுத்தத்தைக் குறிப்பிடுகிறது.
இந்த ரயில் வாரணாசி மற்றும் இந்தூர் இடையே லக்னோ வழியாக 1131 கி.மீ தொலைவிலும், வாரணாசி மற்றும் இந்தூர் இடையே பிரயாகராஜ் (அலகாபாத்) வழியாக 1102 கி.மீ தூரத்திலும் சுமார் 19 மணி நேரத்தில் செல்லும். இந்த ரயிலின் பாதை சுல்தான்பூர் - லக்னோ / பிரயாகராஜ் - கான்பூர் - ஜான்சி - பினா - சாண்ட் ஹிரத்நகர் - உஜ்ஜைன் - இந்தூர் என திரும்புகிறது.