scorecardresearch

காசி விஸ்வநாதர் கோவில் Vs ஞானவாபி மசூதி : சர்ச்சைக்குரிய பகுதியை ஆராய தொல்லியல் துறைக்கு உத்தரவு

மசூதி இருந்த இடத்தில் முன்பே ஒரு கோவில் இருந்ததாகக் கூறும் எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.

Kashi Vishwanath vs Gyanvapi Mosque: Court orders ASI to survey disputed site

 Asad Rehman 

Kashi Vishwanath vs Gyanvapi Mosque: Court orders ASI to survey disputed site : சர்ச்சைக்குரிய இந்த விசயம் நம்முடைய வரலாற்றில் ஆழ்ந்த தொடர்புடையது எனவே இந்திய தொல்லித்துறையின் இயக்குநர், காசி விஸ்வநாத ஆலயம் மற்றும் ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடத்தில் விரிவான தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்குமாறும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு வழிபாட்டு தலங்களும் மிகைப்படுத்தப்படுகிறதா அல்லது ஒன்றன் மீது ஒன்று கட்டப்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் ஒரு அமைப்பின் பகுதி மாற்றப்பட்டு அல்லது சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதா என்று கூற வேண்டும் என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.

ஃபாஸ்ட் ட்ராக் சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) அஸ்துஸ் திவாரியின் இந்த அறிவிப்பு, உச்ச நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 இன் அரசியலமைப்பு செல்லுபடியை சவால் செய்யும் பொதுநல வழக்கு ஒன்றில் மத்திய அரசின் பதிலை கேட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே ஆன நிலையில் வெளியாகியுள்ள்ளது. இந்த வழிபாட்டு தலங்கள் சட்டம் அயோத்தி கோவிலை தவிர்த்து, ஆகஸ்ட் 15, 1947க்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த சட்டம் பி.வி. நரஷிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில், ராமர் கோவில் இயக்கம் உச்சம் அடைந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. இது காசி விஸ்வநாதர் மற்றும் ஞானவாபி கோவில் வளாகத்திற்கும், மதுராவில் அமைந்திருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஷாஹி இத்கா மசூதிக்கும் இது பொருந்தும். இரண்டும் ஒரு காலத்தில் கோவில் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்த இடங்கள், பின்னர் 1991 சட்டத்தால் பாதுகாக்கப்பட்டன. ராம ஜென்மபூமி – பாபர் மசூதி விவகாரத்தில் இந்து கட்சிக்காரர்களுக்கு ஆதரவாக அமைந்த உச்ச நீதிமன்றத்தின் 2019ம் ஆண்டு நவம்பர் மாத தீர்ப்பும் கூட இந்த சட்டம் ஒரு சட்டரீதியான தலையீடு, இது நமது மதச்சார்பற்ற விழுமியங்களின் இன்றியமையாத அம்சமாக பின்வாங்குவதை பாதுகாக்கிறது” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

1991ம் ஆண்டு Ancient Idol Swayambhu Lord Vishweshwar and Others Vs Anjuman Intejamiya Masjid என்று பதிவு செய்யப்பட்ட வழக்கினை மையமாக கொண்டு 2019ம் ஆண்டு வழக்கறிஞர் – மனுதாரரான விஜய் சங்கர் ரஸ்தோகி பதிவு செய்த வழக்கில், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கு என்றும், இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மனுதாரரின் வழக்கு வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991, பிரிவு நான்கின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதா? என்று தன்னுடைய உத்தரவில் கேள்வி எழுப்பிய திவாரி, இதன் விளைவாக சிவில் கோட் ப்ரோசீஜர் 1908 சட்டத்தின் 11(டி) விதி, 18/10/1997 தேதியிட்ட அதன் உத்தரவை முன்னோடி நீதிமன்றம் எதிர்மறையாக தீர்மானித்து. அதனை எதிர்த்து மறுசீராய்வு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும், திருத்த நீதிமன்றம் 23 / 09/1998 அன்று வெளியிட்ட தீர்ப்பின் ஆதாரங்களை எடுத்துக் கொண்ட பின்னரே புதிதாக முடிவு செய்ய முடிவு செய்தது ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாதத்தை அவர் நிராகரித்தார். ருவாய் பதிவுகளில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு மசூதி நுழைந்திருப்பதால், அது சவாலுக்கு திறக்கப்படவில்லை,” என்று கூறி வருவாய்த்துறையின் சான்றுகள் ஒன்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நபரின் உரிமையை உறுதி செய்ய போதுமான சான்றாக பார்க்கப்படவில்லை என்று கூறினார். இதன் நகல்களை தொல்லியல்த்துறை, உத்திர பிரதேச அரசு மற்றும் வாரணாசி நிர்வாகத்திற்கு வழங்க கோரியவர் மே 31 அன்று இந்த உத்தரவை மேலதிக உத்தரவுகளுக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

இந்த மனுவை எதிர்த்த சன்னி மத்திய வக்ஃப் வாரியமும், அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகுவதாக தெரிவித்தனர்.

நீதிபதி தனது உத்தரவில் மனுதாரர் பழங்காலத்தில் இருந்தே இக்கோயில் இருந்தது என்றும், விக்ரமாதித்ய மன்னர் 2050 ஆண்டுகளுக்கு முன்பு அதை புனரமைத்தார் என்றும், அக்பர் பேரரசரின் ஆட்சிக் காலத்தில் இது மீண்டும் புனரமைக்கப்பட்டது என்றும் கூறினார். 1669 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவை தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் “சுயம்பு பகவான் விஸ்வேஸ்வர் கோவிலை இடித்துவிட்டு, அந்தக் கோயில் பாகங்கள் உதவியுடன் ஒரு மசூதியைக் கட்டினர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலே கூறியுள்ள சிவலிங்கம், சுயம்பு லிங்கம். அது பூமியில் இருந்து தானாக தோன்றியது. தற்போது இருக்கும் அதே இடத்தில் இதற்கு முன்பு இடிக்கப்பட்டிருந்தாலும் கூட அந்த சிவலிங்கம் அதனை சுற்றியுள்ள அர்காவுடன் இணைந்தே உள்ளது. சிவலிங்கத்தை வணங்குதல் மற்றும் பிரார்த்தனை செய்வது உள்ளிட்டவை தொடர்ந்தாலும் கூட சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றும் உரிமையை அவர்கள் இழந்துவிட்டனர் என்று மனுதாரர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கவும், தொல்லியல் குறித்து சிறந்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றும் அதில் இருவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தொல்லியல் துறை இயக்குநருக்கு வலியுறுத்தியுள்ளது.

கமிட்டியின் பார்வையாளராக ஒரு நிபுணரை நியமிக்க வேண்டும் என்று அது அறிவுறுத்தியது; கணக்கெடுப்பு பணிகள் குறித்து குழு பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்; முழு கணக்கெடுப்பையும் புகைப்படம் எடுத்து வீடியோகிராப் செய்ய வேண்டும், அது முடிந்ததும், குழு தனது முழு கணக்கெடுப்பின் அறிக்கையையும் சீல் செய்யப்பட்ட அட்டையில் தேவையற்ற தாமதமின்றி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது இந்து தரப்பினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும், ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே தரை மட்டத்தில் இது ஒரு மசூதியாக இருந்தது என்று முஸ்லிம் தரப்பு வாதிட்டது. அதேசமயம் ஒரு கோயில் இடிக்கப்பட்டு வளாகத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பு கூறியது என்று மனுதாரர் விஜய் சங்கர் ரஸ்தோகி கூறினார். அசல் மனு 1991 இல் மூன்று நபர்களால் தாக்கல் செய்யப்பட்டது – பண்டிட் சோம்நாத் வியாஸ், அவருடைய முன்னோர்கள் அக்கோவில் பூசை செய்பவர்களாக இருந்தார்கள். சமஸ்கிருத பேராசிரியர் டாக்டர் ராம்ராங் சர்மா, சமூக சேவகர் ஹரிஹர் பாண்டே ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர்.

வியாஸ் மற்றும் ஷர்மா மரணம் அடைய பண்டிட், விஸ்வேஸ்வரர் ஆகியோரை முதன்மை மனுதாரராகவும், விஜயை கடவுளின் நண்பராகவும் மனுவில் இணைத்துக் கொண்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 1998ம் ஆண்டு தடை விதித்துள்ளது. 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவு படி 6 மாதத்திற்கு மேலான நீதிமன்ற தடை வெற்றிடமாகவே கருதப்படும் (அசாதாரண சூழ்நிலையை உத்தரவில் காட்டாவிட்டால்). Asian Resurfacing of Road Agency vs Central Bureau Of Investigation (CBI) வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று ரஸ்டோகி குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்வோம். எங்களுடைய புரிதலின் படி வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தடை செய்யப்பட்டது. இந்த சட்டத்தை அயோத்தி தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு உறுதி செய்தது. ஞானவாபி மசூதி கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. இல்லையெனில், சட்ட ஆலோசனையின்படி, கணக்கெடுப்பின் வரிசை கேள்விக்குரியது என்று நாம் கூறலாம், ஏனெனில் தொழில்நுட்ப சான்றுகள் சில அடிப்படை உண்மைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். மசூதி இருந்த இடத்தில் முன்பே ஒரு கோவில் இருந்ததாகக் கூறும் எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kashi vishwanath vs gyanvapi mosque court orders asi to survey disputed site