Advertisment

காஷ்மீரில் ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள், 2 போர்ட்டர்கள் உட்பட 4 பேர் பலி

காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் இரண்டு போர்ட்டர்கள் கொல்லப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Kashmir 2 soldiers 2 porters killed in terror attack on Army convoy in Gulmarg Tamil News

பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா விடுதிக்கு அருகே ககாங்கிர் என்ற இடத்தில், இந்த வார தொடக்கத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் உட்பட சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஏழு தொழிலாளர்கள் கொல்லட்டப்பட்டனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, அக்டோபர் 18 அன்று, தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஜைனபோரா கிராமத்தில் உள்ளூர் அல்லாத தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இதேபோல், நேற்று வியாழக்கிழமை காலை, தெற்கு காஷ்மீரில் உள்ள படகுண்ட் கிராமத்தில் பயங்கரவாதிகளால் உள்ளூர் அல்லாத தொழிலாளி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: 2 soldiers, 2 porters killed in terror attack on Army convoy in Gulmarg

இந்நிலையில், காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் இரண்டு போர்ட்டர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இரண்டு போர்ட்டர்களும் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியாரில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் முஷ்டாக் அகமது மற்றும் ஜாகூர் அகமது  எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீநகரில் ஒருங்கிணைந்த தலைமையகம் (UHQ) கூட்டத்திற்கு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​தலைமை தாங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ராணுவம், போலீஸ், துணை ராணுவம் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை முக்கிய சுற்றுலாத் தலமான குல்மார்க்கிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடா பத்ரியில் உள்ள நாகின் போஸ்ட் அருகே, சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை பயங்கரவாதிகள் குறிவைத்தனர். போடா பத்திரி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது துப்பாக்கிச் சூடு நடந்ததை ராணுவம் உறுதி செய்தாலும், அது விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 

பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “வடக்கு காஷ்மீரின் போடா பத்ரி பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமான செய்தி. காஷ்மீரில் சமீபகாலமாக தொடர் தாக்குதல்கள் நடந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, உயிரிழந்த மக்களின் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பாரமுல்லாவில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைகிறேன். அதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்து, காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jammu And Kashmir Terrorism
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment