இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் கதகதப்பு இன்று(செப்.1) மால்தீவுகளின் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதமாக உருவெடுத்தது. ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து பாகிஸ்தான் கேள்வி எழுப்ப முயன்ற போது விவாதங்கள் அரங்கேறின.
மாலத்தீவில் நடந்து வரும் நான்காவது தெற்காசிய சபாநாயகர்கள் உச்சி மாநாட்டின் போது, பாகிஸ்தான் தேசிய சட்டசபை துணை சபாநாயகர் காசிம் சுரி, ராஜ்ய சபா துணை சேர்மேன் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் பாகிஸ்தான் செனட்டர் குராடுலைன் மர்ரி ஆகியோருக்கு இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.
இதுகுறித்த வீடியோவை raajje.mv வெளியிட்டுள்ளது. காசிம் சுரி பேசுகையில், "காஷ்மீரிகள் மீதான கொடுமைகளை எவரும் கவனிக்க முடியாது" என்றார். இதன் பிறகே விவாதம் தொடங்கியது.
ஹர்வியன்ஷ் சிங் கூறுகையில், "இந்தியாவின் உள் பிரச்சினையை இங்கு எழுப்புவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், மேலும் இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளுக்கு புறம்பான பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை அரசியல் மயமாக்குவதையும் நாங்கள் நிராகரிக்கிறோம்" என்றார்.
"பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நலனுக்காக அனைத்து வகையான ஆதரவும் கொடுத்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், இந்த மன்றம் நிலையான முன்னேற்ற இலக்குகளை (எஸ்.டி.ஜி) விவாதிப்பதற்காக மட்டுமே உள்ளது, காஷ்மீர் பிரச்சனையை விவாதிக்க அல்ல" என்றார்.
இதற்கு பதிலளித்த குராடுலைன் மர்ரி, "மனித உரிமைகள் இல்லாமல் நிலையான முன்னேற்ற இலக்குகளை நிறைவேற்ற முடியாது" என்றார்.