ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை திருத்தம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று முன்மொழிந்தார். இந்த முன்மொழிவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தினர்.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு திருத்தம் குறித்து குடியரசுத் தலைவரின் உத்தரவு முழுவதுமாக இங்கே தருகிறோம்.
370வது பிரிவு தொடர்பாக குடியரசுத் தலைவரின் உத்தரவு:
குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொது தகவல்களுக்காக வெளியிடப்படுகிறது.
அரசியல் அமைப்பு ஆணை(ஜம்மு – காஷ்மீருக்கு பொருந்தும்) 2019
அரசியலமைப்பின் 370 வது பிரிவு (1) பிரிவின் படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் பின்வரும் உத்தரவை பிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்:
1. (1) இந்த உத்தரவை ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பு பொருந்தும் உத்தரவு என்று அழைக்கலாம் 2019.
(2) (2) இது உடனடியாக அமலுக்கு வருகிறது. 1954-ல் இருந்த அரசியலமைப்பு சட்ட உத்தரவு புதுப்பிக்கப்படுகிறது.
2. அவ்வப்போது திருத்தப்பட்ட அரசியலமைப்பின் அனைத்து விதிகளும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துடன் தொடர்புடையதாக இருக்கும், மேலும் அவைகளில் பொருந்தக்கூடிய விதிவிலக்குகள் மற்றும் மாற்றங்கள் பின்வருமாறு: பிரிவு 367 க்குள் சேர்க்கப்பட்ட 4வது உட்பிரிவு, “அரசியலமைப்பின் நோக்கங்களுக்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துடன் பொருந்தும்” என்று குறிப்பிடுகிறது.
(ஏ) இந்த அரசியலமைப்பைப் பற்றிய குறிப்புகள் அல்லது அதன் விதிமுறைகள் அரசியலமைப்பின் குறிப்புகள் அல்லது அந்த மாநிலத்துடன் தொடர்புடைய விதிமுறைகள் எனக் கருதப்படும்:
(பி) ஜம்மு காஷ்மீரின் தலைமை குறித்து குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கான குறிப்புகளில், பதவியில் இருக்கிற மாநில அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிற ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கான குறிப்புகளாகக் கருதப்படும்:
(சி) சொல்லப்பட்ட மாநிலத்தின் அரசாங்கம் என்பது அம்மாநிலத்தின் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் செயல்படும் ஆளுநரைப் பற்றிய குறிப்புகளாக கருதப்படும்.
(டி) அரசியலமைப்பின் 370 வது பிரிவு (ஆர்ட்டிகிள்) (3) வது பிரிவில், பிரிவு (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள மாநில அரசியலமைப்புச் சபை மாநில சட்டமன்றம் என்று படிக்கப்படும்.
ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர்