Shubhajit Roy
USA President Donald Trump to mediate on Kashmir : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகள் ஆக சர்ச்சையை கிளப்பிய கொண்டிருப்பது காஷ்மீர் விவகாரம் தான். இதனை சரிசெய்ய இரு தரப்பில் இருந்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அதன் மூலம் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் விளக்கம்
தற்போது அமெரிக்காவிற்குப் பயணம் சென்றிருக்கும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர் டிரம்பை அவருடைய ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி தன்னை காஷ்மீர் பிரச்சனையில் சமரச தூதராக இருக்க அழைத்தார் என்று கூறினார் ட்ரெம்ப். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்.
We have seen @POTUS's remarks to the press that he is ready to mediate, if requested by India & Pakistan, on Kashmir issue. No such request has been made by PM @narendramodi to US President. It has been India's consistent position...1/2
— Raveesh Kumar (@MEAIndia) 22 July 2019
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட அந்த ட்வீட்டில், அமெரிக்கா அதிபர் மாளிகையில் அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட மோடி அழைப்பு விடுத்தாக கூறியுள்ளார் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ட்ரெம்பின் இந்த கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
...that all outstanding issues with Pakistan are discussed only bilaterally. Any engagement with Pakistan would require an end to cross border terrorism. The Shimla Agreement & the Lahore Declaration provide the basis to resolve all issues between India & Pakistan bilaterally.2/2
— Raveesh Kumar (@MEAIndia) 22 July 2019
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் இருந்தாலும் அதனை லாகூர் உடன்படிக்கை மற்றும் சிம்லா ஒப்பந்தத்தின்படி நாங்களே பேசி சரி செய்து கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா மிகவும் உறுதியாக உள்ளது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
ட்ரெம்ப் நேற்று இம்ரான் கானிடம் பேசியது என்ன?
நேற்று வெள்ளை மாளிகையில் பிரதமர் இம்ரான் கானிற்கும் அதிபர் ட்ரெம்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காஷ்மீர் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ட்ரெம்ப் உதவ வேண்டும் என்று கான் கூறியுள்ளார்.
அந்த பேச்சுவார்த்தையின் போது, உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைவர் நீங்கள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே சமரச தூதுவராக இருந்து காஷ்மீர் பிரச்சினையை முடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நூறு கோடி மக்களுக்கும் மேல் வாழ்கின்ற இந்த இடத்தில் கஷ்மீர் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்களும் எங்கள் தரப்பில் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே ட்ரெம்ப் போன்ற ஒருவரால் இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்றும் கான் கூறினார்.
#WATCH Washington DC: Pakistan PM Imran Khan and US President Donald Trump reply to journalists when asked on Kashmir. pic.twitter.com/UM51rbsIYF
— ANI (@ANI) 22 July 2019
இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரெம்ப், நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு மோடியை சந்தித்தேன். அவரும் இதே போன்ற ஒரு கோரிக்கையை வைத்தார். அவரும் நான் சமரசம் தூதராக இருக்க விரும்புகிறார் என்று மோடி கூறியிருந்தார் என்று குறிப்பிட்டார் ட்ரெம்ப். எனக்கு தெரியவில்லை எத்தனை நாட்களாக இந்த பிரச்சனை போகிறது என்று கேள்வி கேட்க 70 ஆண்டுகளாக என்று பதில் கூறினார் இம்ரான் கான்.
இரு நாடுகளும் மிகவும் சாதுர்யமானது. இருநாட்டு தலைவர்களும் மிகவும் திறமை மிக்கவர்கள். உங்களால் தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினையா இது? நீங்கள் என்னை அப்படி சமரச தூதுவராக இருக்க விரும்பினால் நிச்சயமாக இரு நாடுகளுக்கும் இடையே உதவி செய்வேன் என்று கூறியுள்ளார் ட்ரெம்ப். அப்போது இம்ரான் கான், இது மட்டும் நடந்துவிட்டால் 100 கோடி மக்களுக்கும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். அவர்களின் பிரார்த்தனையில் நீங்கள் என்றும் இருப்பீர்கள் என்று குறிப்பிட்டார்.
நான் காஷ்மீர் பற்றி நிறைய கேள்விபட்டதுண்டு. உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்றாக அது இருக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் சமீப காலமாக எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு வெடிகுண்டு சத்தம் தவிர ஒன்றும் கேட்பதில்லை என்று கவலை தெரிவித்திருந்தார் ட்ரெம்.
கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதிகளில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா கைப்பற்ற இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மோடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.