Advertisment

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் பலி

பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர், கெரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தை மீறி நடந்த ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Kashmir news, Kashmir LOC Indian army, India Pakistan Kasmir LOC, Kashmir LOC firing Pakistan, காஷ்மீர், பாகிஸ்தான் ஊடுருவல், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல், Pakistan Kashmir firing, Kashmir LOC firing Pakistan, Indian army Kashmir, பாதுகாப்பு படை வீரர்கள் பலி. Kashmir LOC news, Kashmir latest newsnews

ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பிரிவில் இருந்து உரி பிரிவு வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், பாகிஸ்தான் துருப்புக்கள் பலவிதமான போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டதால் 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

பாகிஸ்தான் துருப்புக்கள் சிறு பீரங்கி தாக்குதல்களையும் பிற ஆயுதங்களை பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரியில் உள்ள நம்ப்லா செக்டாரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹஜி பீர் செக்டாரில் ஒரு பி.எஸ்.எஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் கமல்கோட் பிரிவில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உரியில் உள்ள ஹஜி பீர் செக்டாரில் பால்கோட் பகுதியில் ஒரு பெண் கொல்லப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரியில் பல்வேறு இடங்களைத் தவிர, பண்டிபோரா மாவட்டத்தின் குரேஸ் செக்டார், இஸ்மர்க் மற்றும் குப்வாரா மாவட்டத்தில் கெரன் செக்டாரில் இருந்து போற் நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர், கெரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டு கோடு நெடுக நடந்த ஊடுருவல் முயற்சியை இராணுவம் முறியடித்தது என்று கூறினார்.

"கெரன் செக்டாரில் (வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்) உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள முன்னோக்கி இடுகைகளில் நம்முடைய துருப்புக்களால் இன்று சந்தேகத்திற்கிடமான இயக்கம் காணப்பட்டது. ஊடுருவல் முயற்சியை எச்சரிக்கை படையினரால் முறியடிக்கப்பட்டது” என்று ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா தெரிவித்தார்.

“அவர்கள் சிறு பீரங்கி மற்றும் பிற ஆயுதங்களால் சுட்டனர். அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

புதுடில்லியில் பி.எஸ்.எஃப் அதிகாரிகள் கூறுகயில், “13.15 மணி அளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலையில் காயம் ஏற்பட்டதால், பாரமுல்லாவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டில் பீரங்கி பேட்டரியில் நிறுத்தப்பட்ட எஸ்.ஐ. ராகேஷ் டோவல், 39, கொல்லப்பட்டார் என்று தெரிவித்தனர்.

கான்ஸ்டபிள் வாசு ராஜாவின் கை மற்றும் கன்னங்களில் துப்பாக்கி குண்டு சில்லுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவரும் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். மேலும், அவர்கள் கான்ஸ்டபிளைச் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறினார்கள்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பி.எஸ்.எஃப் பிரிவுகளும் காலையில் இருந்து கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்கின்றன. மேலும், துருப்புக்கள், பீரங்கி படைப்பிரிவு மற்றும் ஆதரவு ஆயுதங்கள் ஆகியவற்றால் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன என்று படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள பி.எஸ்.எஃப் இராணுவத்தின் செயல்பாட்டு கட்டளையின் கீழ் செயல்படுகிறது.

“சப் இன்ஸ்பெக்டர் எல்லை பாதுகாப்பில் மிக உயர்ந்த தியாகத்தை செய்துள்ளார். அதே நேரத்தில், எதிரிகளிடமிருந்து கடுமையான போர்நிறுத்த மீறலை எதிர்கொள்கிறார்கள். இந்த துணை அதிகாரி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் வசிப்பவர். 2004 இல் எல்லைப் படையில் சேர்ந்தவர்” என்று அந்த அதிகாரி கூறினார்.

டோவலின் குடும்பத்தில் அவரது தந்தை, டோவலின் மனைவி மற்றும் ஒன்பது வயது மகள் உள்ளனர்.

ஸ்ரீநகரில், போர் நிறுத்த மீறல் கெரன் முதல் உரி செக்டார் வரை பெரிய பகுதிகளுக்கு பரவியுள்ளதாக கலியா கூறினார்.

இது ஒரு வாரத்திற்குள் நடந்த 2வது ஊடுருவல் முயற்சி. நவம்பர் 7-8 தேதிகளில் மச்சில் செக்டாரில் முந்தைய ஊடுருவல் முயற்சி தோல்வியடைந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது ஒரு கேப்டன், மற்றும் ஒரு பி.எஸ்.எஃப் வீரர் உட்பட 3 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.

ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊடுருவல் முயற்சிகளையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Jammu And Kashmir Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment