scorecardresearch

காஷ்மீர் விவகாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேக புகைப்படத் தொகுப்பு

காஷ்மீரின் சிறந்த பத்திரிக்கை நிறுவனங்களான கிரேட்டர் காஷ்மீர் மற்றும் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கைகளின் இணைய தளமும் முடங்கியுள்ளது.

Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley

Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley :  காஷ்மீரில் கடந்த 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் காஷ்மீரின் தெருவுகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. இங்கே அங்கே என்று சில முகங்கள், சில மனிதர்கள், பாதுகாப்பு படையினர் என்று தெரிவில் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீரில் எடுத்த பிரத்யேக புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே!

Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley

Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்து, சிறப்பு அந்தஸ்த்தினை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 370 நீக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திங்களன்று நடைபெற்ற பக்ரீத் திருநாள் மிகவும் அமைதியாக பள்ளத்தாக்கில் கடைபிடிக்கப்பட்டது. Express photo: Shuaib Masoodi
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley 
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதும், பிரார்த்தனை நடத்துவதும் கூட முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. Express photo: Shuaib Masoodi
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley 
காஷ்மீரில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கை நிறுவனங்களான கிரேட்டர் காஷ்மீர் மற்றும் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கைகளின் இணைய தளமும் முடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த விதமான செய்திகளும் இணையத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. Express photo: Shuaib Masoodi
தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆனது. செல்ஃபோன்கள், இணைய சேவை, மற்றும் லேண்ட்லைன் சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. Express photo: Shuaib Masoodi

மேலும் படிக்க : காஷ்மீர் விவகாரம் : வீட்டில் இருப்பவர்களுடன் பேச முடியாமல் தவிக்கும் துணை ராணுவ வீரர்கள்

Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley 
சிறப்பு தொலுகைகளுக்காக ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு உத்தரவு திரும்பி பெறப்பட்டது. Express photo: Shuaib Masoodi.
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley 
ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது இந்தியா பாகிஸ்தான் எல்லைப்புற ராணுவ வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகள் பரிமாறிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த பதட்டமான சூழலினால் பக்ரித் அன்று இந்நிகழ்வுகள் நடைபெறவில்லை. Express Photo by Shuaib Masoodi
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley 
கார்கில் பகுதியில் சிலர் 8ம் தேதி போரட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மீண்டும் 370-வதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போரட்டம் நடத்தியதோடு பாதுகாப்பு படையினர் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தினர். பின்பு கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டு நிலைமை ஒழுங்கு செய்யப்பட்டது. Express Photo by Shuaib Masoodi
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley
சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் மூலமாக காஷ்மீரில் பிரச்சனை எழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், லைன் ஆஃப் கண்ட்ரோலில் அதிக பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Express Photo by Shuaib Masoodi
Kashmir lockdown Exclusive Express photos from Kashmir Valley
அனைத்து ராணுவ உயர் அதிகாரிகள்ளும் ஜம்மு – காஷ்மீரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்து வருகின்றனர். Express Photo by Shuaib Masoodi

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kashmir lockdown exclusive express photos from kashmir valley

Best of Express