பல தடைகளைக் கண்ட காஷ்மீருக்கு இந்த தடை வித்தியாசமானது எப்படி?

Kashmir Valley has seen many strike, but this time it is so different: பலதடைகளை, பல முழு அடைப்புகளை, பல ஊரடங்கு உத்தரவுகளைக் கண்ட காஷ்மீருக்கு இந்த தடை மிகவும் வித்தியாசமானது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வெறிச்சோடிய தெருக்களில் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து செல்கின்றனர். காஷ்மீரில்…

By: Published: August 7, 2019, 4:41:49 PM

முசமில் ஜலீல், பஷாரத் மசூத், அடில் அக்ஸெர்

Kashmir Valley has seen many strike, but this time it is so different: காஷ்மீர் பள்ளத்தாக்கின் வெறிச்சோடிய தெருக்களில் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து செல்கின்றனர். காஷ்மீரில் உள்ளவர்களின் வீடுகள் பூட்டப்பட்டிருக்கிறது. இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். முக்கிய மைய நீரோட்ட கட்சிகளின் செயல்பாட்டாளர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு அளவுக்கு ஒரு கேள்விக்குறி அம்மாநிலத்தின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது.

புது டெல்லியில் மாற்றி எழுதப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 370வது பிரிவு திருத்தம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்கியிருக்கிறது. மேலும், அதை பிளவுபடுத்தி, ஒரு யூனியன் பிரதேசமாக குறைத்திருப்பதால் காஷ்மீர் மக்கள் திகைத்துப்போயிருக்கிறார்கள்.

பெயர் குறிப்பிட விரும்பாத தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், “இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த உணர்வு இன்னும் அழுத்திக்கொண்டிருக்கிறது” என்று கூறினார் மேலும், “இந்த தன்னிச்சையான முடிவுக்கு நிச்சயமாக ஒரு எதிர்வினை இருக்கும். அவர்களுடைய பிரச்னையில் தலையிட்டு அவர்களுடைய நிலம், தண்ணீர், வானத்துடன் காஷ்மீரிகள் விற்கப்பட்ட 1846 ஆம் ஆண்டு அம்ரித்சர் உடன்படிக்கைக்கு பின்னர், இது மிகப்பெரிய அடக்குமுறை சட்டம்” என்று கூறினார்.

ஒரு இடத்துக்காக வரலாற்றின் பாரம் எப்போதும் கனக்கிறது. அங்கே எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாகக் காணப்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் உள்ளேயும் வெளி உலகத்துடனும் அதனுடைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து இணைய தொடர்புகள், செல்லுலார், லேண்ட்லைன் மற்றும் கேபிள் டிவி சேவைகள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகாமையில்கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நிர்வாகம் தனது சொந்த ஊழியர்களுக்கு கூட ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்கான பாஸ்களை வழங்கவில்லை. பாதுகாப்பு வீரர்கள் அரசு ஊழியர்களின் அரசாங்க அடையாள அட்டைகளை பாஸாக ஏற்க மறுக்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நகரத்தில் உள்ள ஜீரோ பிரிட்ஜில் 1 சதுர கி.மீ பரப்பளவு அளவில் பெரும்பாலான தொலைக்காட்சி குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். விமானநிலையம் செல்லும் பாதை மற்றும் ராஜ்பாக்-ஜவஹர்நகர் பாதை ஆகிய பகுதிகளில் சிறிது பாதுகாப்புகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த இடத்தைதான் டிவி கேமிராக்கள் படம்பிடித்து காட்டுகின்றன. மற்ற இடங்களில், உள்ள சாலைகள் முள்கம்பி வலைகளாலும், சாலை தடுப்புகளாலும் தடுக்கப்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ வீரர்கள் வழக்கமான சோதனைச் சாவடிகளில் ரோந்து வருகின்றனர். பெரும்பாலான காவல்துறையினர் துப்பாக்கி வைத்திருக்காமல் லத்திகளை வைத்திருக்கின்றனர்.

ஜஹாங்கீர் சௌக்கில் ஆற்றின் குறுக்கே, ஊடங்கு உத்தரவை படமாக்க முயன்ற ஒரு பத்திரிகையாளரிடம் போலீஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் தங்கள் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிறார்கள். அவர்கள் அங்கு குடியிருப்பவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பி வருகிறார்கள். அலுவலக கட்டிடத்தில் டஜன் கணக்கான காவல்துறையினர் போகின்றனர். அலுவலக தாழ்வாரங்கள்தான் அவர்களின் தற்காலிக தங்குமிடம். ஏனென்றால், இடம் குறைவாக உள்ளது. பெரும்பாலான அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வந்திருக்கும் பறக்கும் துணை ராணுவப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை ராஜஸ்தானிலிருந்து அரை டஜன் பேருந்துகளில் எல்லை பாதுகாப்பு படையினர் வந்தனர். அவர்கள், நகர மையத்தில் உள்ள ஒரு வெட்டவெளி வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் உட்பட பல குடியிருப்பாளர்களுடன் பேசியது. அவர்கள் ஆழ்ந்த அவநம்பிக்கையையும் மற்றும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். அவர்களில் பெரும்பாலோர் அரசு மாநிலத்தை மறுசீரமைப்பது, ஜம்மு காஷ்மீரின் மக்கள்தொகையை மாற்றும் நோக்கத்தை கொண்டிருப்பதாகவும் குறிப்பாக முஸ்லிம் மக்கள்தொகையின் பங்கை குறைக்கும் நோக்கத்துடன் இருப்பதாகவும் அஞ்சுகின்றனர்.

“அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று ஸ்ரீநகரில் உள்ள அபி குசாரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத 30 வயது இளைஞர் ஒருவர் கூறினார். மேலும், அவர் இது முதலில் முதலீட்டின் பெயரில்தான் வரும் என்று கூறினார்.

பிரிவினைவாதிகள் மத்தியில் ஒரே குரலில், நாங்கள் உங்களுக்குச் சொல்லியிருக்கிறோம், என்றாலும், முழு இந்திய சார்பு நிலையால் அரசியல் சூழல் அமைப்பு சலசலக்கிறது என்று கூறுகின்றனர்.

“சொந்த மக்களுடன் உடன்படாத முஸ்லிம் குரல்களை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. அவர்கள் ஒரு மதச்சார்பற்ற இந்தியாவை நம்புகிறார்கள். ஏனெனில், அவர்கள் அந்த மதச்சார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்” என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.

இந்த மைய நீரோட்ட கட்சிகளிடம் இப்போது எதுவும் மிச்சமில்லை. தேசிய மாநாட்டு கட்சி முதல் புதிய கட்சியான ஷா ஃபேசல் கட்சி வரை அனைவரும் ஒரே படகில்தான் இருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பலர், இந்த பிரச்னைக்கு மையநீரோட்ட அரசியல்வாதிகள் எழுந்து நின்று கூட்டு எதிர்ப்பிற்கான ஒற்றுமையை உருவாக்குவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள்.

“கடந்த 70 ஆண்டுகளாக அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்த ஒரு வாதம் நாடாளுமன்றத்தில் 15 நிமிடங்களுக்குள் சுக்கலாகி விட்டது” என்று காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர் முகமது உமர் கூறினார். மேலும், அவர் “அவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்போது மக்களிடம் மன்னிப்பு கேட்டு எழுந்து நிற்பதே அவர்களின் ஒரே வழி. ” என்று கூறினார்.

தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த செயல்பாட்டாளர் ஒருவர், தனது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை கூறினார். மேலும், அவர் கூறுகையில், “என்னுடைய தந்தை இந்தியாவின் கொள்கைக்காக இறந்தார். இந்த கொள்கைக்காகத்தான் மைய நீரோட்ட கட்சியில் சேர்ந்தேன். அவர் காஷ்மீர் மதச்சார்பற்ற இந்தியாவுடன் இருப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்ததால் போர்க்குணத்துடன் துப்பாக்கி தோட்டாக்களை ஏற்றார். இதற்கு பிறகு, என்னுடைய மற்றும் எனது தந்தையின் அறிவை கேள்விக்குள்ளாக்குகிறேன். நாங்கள் (மைய நீரோட்ட கட்சி) இதற்கு எதிராக நிற்கவில்லை என்றால், எனது அரசியல் எதிர்காலம் குறித்து நான் தீர்மானிக்க வேண்டும். ” என்று கூறினார்.

நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காமல் ஒரு கூட்டத்தை நடத்தியதாக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். மேலும், மாநிலத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை அரசியலமைப்பு மோசடி என்று அவர் கூறினார். மேலும், அவர் கூறுகையில், இணைப்பு ஒப்பந்தத்தின் புனிதம் போய்விட்டது. தேர்தல்களில் நாங்கள் பங்கேற்பது என்பது எங்களுடைய மரண தண்டனையில் கையெழுத்திடுவது போன்றது. இந்த நேரத்தில், கூட்டு எதிர்ப்பைத் தொடங்குவதே முன்னோக்கி செல்வதற்கு ஒரே வழி என்ற உணர்வு வளர்ந்து வருகிறது என்று கூறினார்.

மேலும், அந்த தலைவர் கூறுகையில், “முதலில், பிரிவினைவாதிகளை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும்தான் என்ஐஏ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற முகமை நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன. பிரிவினைவாதிகளை அழிக்கத்தான் அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அவர்கள் இன்று எங்களுக்காக வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, கடந்த 70 ஆண்டுகளாக மூவண்ணக் கொடியை வைத்திருந்தவர்கள், காஷ்மீரில் உண்மையான இந்தியர்களாக இருந்தவர்கள்.” என்று அவர் கூறினார்.

சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. பல ஏடிஎம்கள் பணம் இல்லாமல் உள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளில் தினசரி அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து வருகின்றன.

நவ்காமில் வேகமாக வந்த ஒரு வாகனம், 22 வயது இளைஞர் ஒருவர் மீது மோதியது. ஒரு மாருதி வேன் டிரைவர் அவரை தூக்கிக்கொண்டு ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் (எஸ்.எம்.எச்.எஸ்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த வாகன ஓட்டுநர் கூறுகையில், “நாங்கள் எல்லா சோதனை சாவடிகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டோம். அவர்கள் நாங்கள் முன்னோக்கி போவதற்கு அனுமதிக்கவில்லை. அவர்களிடம் மன்றாடிய பிறகு, அவர்கள் எங்களை செல்ல அனுமதித்தனர். ”என்று கூறினார். “அருகில் உள்ள ஜஹாங்கீர் சௌக் போவதற்கு எங்களுக்கு இரண்டரை மணி நேரம் ஆனது. ஜஹாங்கிர் சௌக்கில் வாகனம் நிறுத்தப்பட்டது. எங்களை முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை. இறுதியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்து அடிபட்டவரை மாற்றிச் சென்றது. ஆனால், அது அவர் இறந்த பிறகுதான்” என்று அந்த ஓட்டுநர் தெரிவித்தார்.

கோடை விடுமுறைக்காகவும், ஈத் பண்டிகைக்காகவும் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பல தொழில் வல்லுநர்களும் மாணவர்களும் திரும்பி வருவது கடினம். இணையம் இல்லாததால் அவர்களால் அவர்களுடைய விமான டிக்கெட்டை பதிவு செய்ய முடியாது. இங்கிருந்து வெளியே மட்டும்தான் போக முடியும். விமான நிலைய சாலை ஒவ்வொரு 300 மீட்டர் இடைவெளியில் சாலை தடுப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது. உரிய விமான டிக்கெட் இல்லாமல் விமான நிலையத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஊரடங்கு உத்தரவின்போது வெளியே செல்ல பாஸ் கேட்கும் நபர்களுக்கு ஸ்ரீநகரில் துணை ஆணையர் சஷித் சவுத்ரியின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

“இது எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையின் மருந்து சீட்டு, நாங்கள் அங்கு செல்ல வேண்டும், ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை” என்று ஸ்ரீநகரின் ராஜ்பாக் நகரைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அதற்கு அரசாங்கம் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டுகிறது. ஆனால், அது மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்பது எப்படி காரண்மாக முடியும்? நாங்கள் ஊடங்கு உத்தரவு பாஸ் கேட்க துணை ஆணையர் அலுவலகமும் செல்ல முடியாது என்று அவர் கூறினார்.

நிச்சயமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பல முழு அடைப்புகள் மற்றும் பல ஊரடங்கு உத்தரவுகளைக் கண்டுள்ளது. ஆனால், இந்த முறை தப்பிக்க வழியே இல்லை என்பதுதான் வித்தியாசம். அண்டை வீடுகள் எல்லாம் பூட்டப்பட்டிருப்பதால், காஷ்மீர் காஷ்மீருக்குளே பார்க்க முடியாமல் காணாமல் போயுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kashmir valley has seen many strike but this time it is so different

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X