”என்னையும் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்: கத்துவா சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடும் வழக்கறிஞரின் அழு குரல்!!!

நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கில் இருந்து நான் விலக போவதில்லை

காஷ்மீரில் 8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  வழக்கில், நியாம் கேட்டு போராடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி,   8 பேர் கொண்ட கும்பலால்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஜனவரி மாத அரங்கேறிய இந்த கொடூரத்தின் உண்மை முகம் தற்போது தான் வெளியில் தெரிந்தது.

இந்த   கொடூரத்திற்கு இரண்டு காவல் துறை அதிகாரிகளும் உடந்தை என்பது அதை விட அதிர்ச்சி.  1 லட்சம் ரூபாய் பணத்திற்காக சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக ன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் மீதான வழக்கு  காஷ்மீர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களுக்கு  தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்று நாடும் முழுவதும் குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில் சிறுமி சார்பில் வாதாட தீபிகா எஸ். ரஜாவத் என்ற பெண் வழக்கறிஞர் முன்வந்துள்ளார்..  8 வயது சிறுமிக்கு நியாம் கிடைக்க  என் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன் என்று தீபிகா  தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தீபிகா இந்த வழக்கில் சிறுமிக்கு வாதாட கூடாது என்று சில இந்து அமைப்பினர் அவரை  பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். இதுக் குறித்து திபீகா பேசியதாவது, “ எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. என்னை பலாத்காரம் செய்யக்கூடும் அல்லது மானபங்கப்படுத்தக்கூடும். உன்னை மன்னிக்க மாட்டோம் என்று மிரட்டி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவள் என்பதால் அவளுக்கு நான் வாதாட கூடாதாம்.  அப்படி செய்தால் நான் ஒரு தேச துரோகியாம். இதையெல்லாம் கேட்கும் போது நான் வெட்கி தலைகுனிகிறேன்.  8 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கொண்டு வர போரடும் போது ஜாதி மதம், எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

நான் ஆபத்தில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கில் இருந்து நான் விலக போவதில்லை” என்று  தெரிவித்துள்ளார்.

 

 

×Close
×Close