ஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை... பதான்கோட் நீதிமன்றம் அதிரடி

Kathua Rape Case Verdict Life imprisonment : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது கத்துவா என்ற கிராமம். இங்கு பக்கர்வால் என்ற குதிரை ஓட்டும் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். ஊருக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி வாங்கும் நோக்காக 8 வயது சிறுமி ஆசிஃபா கோவிலுக்குள் வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

தேசிய அளவில் பெரும் கோபத்தை ஏற்படுத்திய இந்த சம்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து தக்க தண்டனைகள் வாங்கித்தர வேண்டும் என்று ஒரு சாரர் குரல் எழுப்ப, மற்றொரு பக்கம் கைது செய்யப்பட்டவர்கள் நிரபாரதிகள், அவர்களை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் சாலையில் போராட்டம் நடத்திய கொடுமைகளும் அரங்கேறின.

பதான்கோட் நீதிமன்றத்தில் 7 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஒருவர் தவிர்த்து 6 நபர்களையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதி அறிவித்துள்ளது.

உள்ளூர் தலைவர் சஞ்சி ராம், சிறப்பு காவல் துறை அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, தீபக் கஜூரியா, தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் துட்டா, சஞ்சி ராமின் மகன் விஷால் ஜங்கோத்ரா, மற்றும்  ராமின் உறவினர் பர்வேஷ் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட 7ம் நபர் விஷால் ஜங்கோத்ரா 16 வயது பூர்த்தி அடையாதவர் என்பதாலும் இந்த சம்பவம் நிகழ்ந்த போது அவர் தேர்வு எழுத சென்றுவிட்டதாகவும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டதால் அவரை மட்டும் குற்றவாளியாக அறிவிக்க முகாந்திரம்  இல்லை என்றும் அறிவித்துள்ளது.

ரன்பீர் பீனல் கோட் (ஜம்மு – காஷ்மீர் தண்டனைச் சட்டங்கள்) 302 (கொலை), 376 டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் ஆதாரங்களை அழித்தல் தண்டனைப் பிரிவின் கீழ் காவல்துறையினர் சுரேந்தர் வர்மா, திலக் ராஜ், மற்றும் ஆனந்த் துட்டா மூவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கபட்டுள்ளனர்.

மேலும் படிக்க : போக்ஸோ சட்டம் கூறுவது என்ன? புதிய மாற்றங்கள் என்ன?

Kathua Rape Case Verdict Life imprisonment for Prime Accused

2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி ராசானா என்ற கிராமத்தில் இருந்து காணாமல் போன ஆசிஃபாவிற்கு வயது வெறும் 8.

கிட்டத்தட்ட ஒரு வார்ரம் கழித்து 17ம் தேதி சடலமாக மீட்டெடுக்கப்படுகின்றார்.

இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிக்கை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தயார் செய்யப்பட்டது. மே மாதம் 30ம் தேதி பதான்கோட் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டடது.

கிட்டத்தட்ட 275 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் சுமார் 128 நபர்களை விசாரணை செய்துள்ளது நீதிமன்றம்.

சாட்சி கூறியவர்களின் கருத்துகள் அனைத்தும் மே 27ம் தேதியோடு நிறைவடைந்தது. ஆதாரங்கள் சமர்பித்தல் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் மே 30ம் தேதி நிறைவடைந்தது.

4 மணிக்கு வெளியாகியுள்ள தீர்ப்பில் கடத்தல், கொலை, கற்பழிப்பு, ஆதாரங்களை அழித்தல், பாதிப்பிற்குள்ளானவருக்கு போதைப் பொருட்களை கொடுத்தல் போன்ற குற்றங்களை செய்த முக்கிய குற்றவாளிகளான சஞ்சி ராம், தீபக் கஜுரியா, மற்றும் பர்வேஷ் குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் துட்டா, ஹெட் கான்ஸ்டபிள் திலக் ராஜ் மற்றும் சுரேந்தர் வர்மா ஆதாரங்களை அழிக்க உதவி புரிந்ததிற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டை விதிக்கப்பட்டுள்ளது.

6 நபர்களையும் குற்றவாளிகளாக அறிவித்ததை வரவேற்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close