Advertisment

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; கையெறி குண்டுகளை வீசி, இருபுறமும் தாக்கிய தீவிரவாதிகள் குழு

ஜம்மு காஷ்மீர் கதுவா பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம்; கையெறி குண்டுகளை வீசி, இருபுறமும் தாக்கிய தீவிரவாதிகள்; பெரிய பயங்கராவதிகள் குழு தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தகவல்

author-image
WebDesk
New Update
kathua attack

தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் கதுவாவில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். (ஏ.என்.ஐ)

Arun Sharma , Amrita Nayak Dutta

Advertisment

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது திங்கள்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், ஐந்து வீரர்கள் மரணமடைந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர், மாலை 3.10 மணியளவில், தொலைதூர பத்னோட்டா கிராமத்தில் உள்ள ஒரு நுல்லாவின் மீது ஒரு பாலத்தில் கான்வாய் சென்றுக் கொண்டிருந்தபோது, இந்தத் தாக்குதல் நடந்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன.

ஆங்கிலத்தில் படிக்க:

ஆதாரங்களின்படி, தீவிரவாதிகளின் ஒரு பெரிய குழு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தை மிகவும் "உறுதியான பயங்கரவாத நடவடிக்கை" என்று அழைத்த ஒரு பாதுகாப்பு வட்டாரம், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய குழு இப்பகுதியில் வெற்றிகரமாக ஊடுருவியதாக தகவல்கள் இருந்ததாகக் கூறியது.

வடக்கு மற்றும் மேற்கு படைகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான படையினரும் சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மேலதிக துருப்புக்களில் அடங்குவர். ராணுவ நிர்வாக வாகனம் இரு திசைகளில் இருந்து தாக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலில் ஒரு வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசிய தீவிரவாதிகள், பின்னர் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தீவிரவாதிகள் அருகிலுள்ள வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

திங்கள்கிழமை இரவு வரை துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது, மேலும் சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன. தேடுதல் வேட்டை நடந்து வரும் நிலையில், பாரா (சிறப்புப் படை) பணியாளர்கள் செவ்வாய்கிழமை இந்த நடவடிக்கையில் இணைவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கதுவா ஒருபுறம் பாகிஸ்தானுடனும், மறுபுறம் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்துடனும் சர்வதேச எல்லையைக் கொண்டுள்ளது. இது ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர், தோடா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.
கதுவா நகரத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்னோடா கிராமம், மச்சேடி மற்றும் லோஹாய் மல்ஹார் இடையே அமைந்துள்ளது. 1990 களின் நடுப்பகுதி முதல் 2000 களின் முற்பகுதி வரை இப்பகுதி போர்க்குணத்தின் மையமாக இருந்ததால் பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே மச்சேடியில் ஒரு தளத்தைக் கொண்டிருந்தன. இப்போது, பக்கத்து மாவட்டங்களில் இருந்து தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியை ஒட்டிய லோஹாய் மல்ஹரின் உயரமான பகுதிகளை நோக்கி துருப்புக்கள் நகர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராணுவம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில்: “கதுவா என்கவுன்டரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது இதயம் இரங்கல் தெரிவிக்கிறது. அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் கூட்டு நடவடிக்கை நடந்து வருகிறது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்பது எனது உண்மையான வேண்டுகோள். நமது ஆயுதப் படைகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நாங்கள் அவர்களுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஜூன் 11-12 தேதிகளில் ஹிராநகர் தாலுகாவின் சைதா கிராமத்தில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றபோது, கடந்த மாதமும் கதுவா என்கவுன்டரைக் கண்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர் உயிரிழந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, தீவிரவாதிகள், சர்வதேச எல்லை வழியாக மாவட்டத்திற்குள் ஊடுருவிய பின்னர், உதம்பூருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

ஜூன் 11-12 இடைப்பட்ட இரவில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் கூட்டு நாகாவும் தாக்கப்பட்டது, தோடா மாவட்டத்தில் ஐந்து வீரர்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஓ காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று தீவிரவாதிகள் பின்னர் ஜூன் 26 அன்று காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

ஜூன் 9 அன்று, ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற கத்ரா செல்லும் பேருந்து தாக்கப்பட்டதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jammu Kashmir Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment