2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் புதன்கிழமை, தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு, பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என்று பெயர் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில், 280க்கும் மேற்பட்ட கட்சி செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் டி.ஆர்.எஸ் கட்சியை பி.ஆர்.எஸ் உடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றினர். செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.ஆர், தீர்மானத்தை வாசித்து, டி.ஆர்.எஸ் என்ற பெயரை பி.ஆர்.எஸ் என மாற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஏப்ரல் 27, 2001 அன்று, தெலுங்கானா பகுதியில் வாழும் மக்களிடம், பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, தனி மாநிலம் கோரி, கே.சி.ஆரால் நிறுவப்பட்டது.
இதையும் படியுங்கள்: நாடாளுமன்ற நிலைக் குழு: எதிர்கட்சிகளுக்கு தலைமை பொறுப்பில் இடமில்லை.. காங்கிரஸுக்கு 1 இடம்
தெலுங்கானா உருவானவுடன் நடந்த முதல் சட்டசபை தேர்தலில், 119 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், 63 இடங்களை வென்று, டி.ஆர்.எஸ் கட்சி, கே.சி.ஆர் தலைமையிலான, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பி.ஆர்.எஸ் தொடங்குவதற்கு முன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல தேசிய தலைவர்களை கே.சி.ஆர் சந்தித்தார்.
பாரத ராஷ்டிர சமிதியின் ஐந்து முக்கிய புள்ளிகள் இங்கே:-
1) ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் டி.ஆர்.எஸ்-ஐ பி.ஆர்.எஸ் உடன் இணைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, தசரா பண்டிகையையொட்டி புதன்கிழமை மதியம் சரியாக 1.19 மணிக்கு பாரத் ராஷ்டிர சமிதி தொடங்கப்பட்டது, இது "சுபமான நேரம்" என்று கட்சி கூறியது.
2) ஆதாரங்களின்படி, கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் பல மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தும். விவசாய சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான செயல்திட்டத்தையும், தலித்துகளுக்கான விரிவான முன்னேற்ற திட்டங்களையும், நாட்டில் வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தையும் தயாரிப்பதில் கே.சி.ஆர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
3) விழாவிற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியுடன் ஹைதராபாத் வந்த ஜே.டி.(எஸ்) நிர்வாகி ஒருவர், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க.,வை எதிர்த்துப் போராடும் "பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் கூட்டமைப்பாக" இந்த புதிய அணி இருக்கும், என்று கூறினார்.
4) டி.ஆர்.எஸ் அமைப்பின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றுவதற்கு தேவையான திருத்தங்கள் கட்சி அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் டி.ஆர்.எஸ் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
5) முனுகோடு இடைத்தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கே.சி.ஆரின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நவம்பர் 3-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.