Telangana | Chandrashekhar Rao: தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) (69) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் தனது பண்ணை வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: BRS chief KCR hospitalised after fall, suffers hairline fracture
"அவருக்கு முடி அளவு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது மற்றபடி அவர் நலமாக இருக்கிறார்” என்று கே.சி.ஆர் குடும்பத்திற்கு நெருக்கமான பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை
இந்த நிலையில், சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை (left hip replacement ) செய்ய வேண்டும் என்றும், இது ஆறு முதல் எட்டு வாரங்களில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் யசோதா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கே.சி.ஆரின் மகளும், தெலுங்கானா எம்.எல்.சியுமான கே.கவிதா, தனது தந்தைக்கு "சிறிய காயம்" ஏற்பட்டுள்ளதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பி.ஆர்.எஸ் தலைவர் கே.சி.ஆர் அவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது, தற்போது மருத்துவமனையில் நிபுணர்களின் கண்காணிப்பில் உள்ளார். ஆதரவும் வாழ்த்துக்களும் குவிந்துள்ளதால், அப்பா விரைவில் குணமடைவார். அனைத்து அன்புக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“