இவர் தெலங்கான சட்டமன்ற மேலவை உறுப்பினர், முன்னாள் எம்.பி, இவர் கே.சி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள். 44 வயதான கல்வகுண்டல கவிதா, டெல்லி மதுக் கொள்கை விவகாரத்தில் ஈடுபட்டதாக புதுதில்லியில் உள்ள பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, தற்போது அவர் விவாதத்தின் மையத்தில் சிக்கியுள்ளார்.
தெலுங்கானாவில் பாஜக காலூன்ற முயற்சிக்கும் நேரத்தில், ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரு கட்சிகளுக்கு இடையேயான சண்டை மூர்க்கமாக மாறியுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கவிதா மீதான குற்றச்சாட்டுகளை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அம்மாநில பாஜக தலைவர் பாந்தி சஞ்சய் குமார் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டை முன்னாள் எம்.பி. கவிதா மறுத்துள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான கவிதா அமெரிக்காவில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார். தெலுங்கானா மாநில இயக்கம் தீவிரமடைந்ததால், அவர் இந்தியா திரும்புவதற்கு முன்பு சில ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தார். அவர் தெலுங்கானா மாநில இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். பெரும்பாலும் அனைத்து பெண்களின் பெரிய போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கினார். டி.ஆர்.எஸ் தலைவர் பின்னர் கூறினார், இயக்கத்தில் பங்கேற்கும் போது மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பற்றி அறிந்தேன். அவற்றை மேம்படுத்துவதில் ஈடுபடுவேன் என்று கூறினார். ஆகஸ்ட் 2006 இல், டி.ஆர்.எஸ் கட்சி உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கவிதா தெலுங்கானாவின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் பண்டிகைகளை மேம்படுத்துவதற்காக தெலுங்கானா ஜாக்ருதி அமைப்பை நிறுவினார்.
பதுகம்மா மலர் திருவிழாவை மீட்டெடுப்பதில் கவிதா முக்கிய பங்கு வகித்தார். இந்த விழா, தெலுங்கானா மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தபோதிலும், அது அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இல்லை” என்று அவர் ஒருமுறை கூறினார். 2014ல் தெலுங்கானா உருவானபோது, பதுகம்மா ஒரு பிரபலமான நிகழ்வாக மாறியது. அவர் முன்னோடியாக கொண்டாட்டங்களை வழிநடத்தினார். பல ஆண்டுகளாக இது மாநிலத்தின் கலாச்சார விழாக்களில் ஒரு பகுதியாக மாறியது. அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிற பிரபலங்கள் பங்கேற்றனர். அவர்களில் பேட்மிண்டன் வீராங்கணை பிவி சிந்து போன்றவர்களும் பங்கேற்றனர். டி.ஆர்.எஸ் தலைவர் கவிதா, வெளிநாடுகளில் இந்த விழாவைக் கொண்டாடும் என்.ஆர்.ஐ குழுக்களை அமைத்த பெருமையையும் பெற்றார்.
தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும்
கவிதா 2014 ஆம் ஆண்டு நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்தல் அரசியலில் முதலில் அறிமுகமானார். காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை எம்.பி-யாக இருந்த மது கவுட் யாஸ்கியை அவர் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அவர் ஒரு தீவிர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பினார். ஆனால், மாநிலத்திற்குத் திரும்பி, மஞ்சள் விவசாயிகளிடையே அதிகரித்து வரும் கோபத்தை தணிக்கத் தவறிவிட்டார். கவிதா பொதுவாக மக்களுடன் நன்றாக பழகுவார். ஆனால், விவசாயிகளுடன் தொடர்பில் இருக்கவில்லை என டி.ஆர்.எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிளவை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 2019ல் பாஜக வேட்பாளர் தர்மாபுரி அரவிந்த் கவிதாவை தோற்கடித்தார்.
தோல்வியால் அதிர்ச்சி அடைந்த டி.ஆர்.எஸ் தலைவர் கவிதா சில மாதங்களாக மக்கள் பார்வையில் இருந்து விலகி இருந்தார். 2020 அக்டோபரில் நிஜாமாபாத்தில் இருந்து மாநில சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பொது வாழ்க்கைக்கு திரும்பினார். மேலும், டிசம்பர் 2021 இல் மீண்டும் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிலாபாத்தில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன அலகின் சொத்துக்களை ஏலம் விடுவது, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் போன்றவற்றை எதிர்த்து, பாஜக தலைமையிலான மத்திய அரசை அவர் விமர்சித்தார்.
ஆனால், கவிதா மீண்டும் நிஜாமாபாத்தை நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நம்பிக்கையை கைவிடவில்லை. மே மாதம், தர்மாபுரியில் மஞ்சள் வாரியம் அமைப்பதாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகச் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும், டெல்லி கலால் வரி, தர்மாபுரியை குறிவைக்கும் அவரது முயற்சிகளுக்கு தடையாக இருக்கலாம். கே.சி.ஆரின் குடும்பம் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் வருவது இதுவே முதல் முறை. பாஜக மற்றும் சில காங்கிரஸ் தொண்டர்கள் நிஜாமாபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஆனால், கவிதா எம்.எல்.சி இந்த சர்ச்சையை விரட்டும் நோக்கத்தில் உள்ளார். “இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நாங்கள் போராளிகளின் குடும்பம், இதை எதிர்த்துப் போராடுவோம். பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.” என்று கவிதா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”