டெல்லி மதுபான ஊழல் வழக்கு நாட்டை உலுக்கி வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் டெல்லி யூனியன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறைக் காவலில் உள்ள அவரை அமலாக்கத் துறை அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) கைது செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஹைதராபாத்தில் அருண் பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ்வின் மகள் கவிதாவின் பினாமி என்று தகவல்கள் வெளியாகின. முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பரில் அவர் விசாரிக்கப்பட்டார். இதற்கிடையில் மீண்டும் அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இதன் பேரில் இன்று டெல்லி அலுவலகத்தில் கவிதா ஆஜரானார்.
9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், கவிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் மார்ச் 16ஆம் தேதி ஆஜராக உள்ளார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து கவிதா புன்முறுவலுடன் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் தனது மகள் கைது செய்யப்படலாம் என கே.சி.ஆர். தெரிவித்திருந்தார். மேலும், இது எனக்கு வைக்கப்பட்ட குறி அல்ல எனது தந்தை கே.சி.ஆர்.க்கு வைக்கப்பட்ட இலக்கு என கவிதாவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/