Advertisment

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பயணிகள் உயிரிழப்பு.. விசாரணைக்கு உத்தரவு

Helicopter Crash in Kedarnath: கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து

author-image
WebDesk
New Update
Kedarnath | Kedarnath Helicopter Crash | KedarnathNews |

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து

Helicopter Crash in Kedarnath: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நிகழ்ந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் தரப்பில், “ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்க சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தது.
இந்தக் ஹெலிகாப்டர் இந்திய-திபெத் எல்லை பகுதியான கருட் சட்டி
(Garud Chatti) என்ற பகுதிக்கு நுழைந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்” எனத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ பகுதியில் இந்திய திபெத் எல்லையோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு சார்தாம் யாத்திரை சென்று திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment