நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாககொண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நடிகை கீர்த்தி சுரேஷூக்கு, இந்தாண்டின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
66வது தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 9ம் தேதி) அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற படங்கள், நடிகர்கள் குறித்த அறிவிப்பினை விருது கமிட்டி நடுவர்க்குழு தலைவர் ராகுல் ரவெய்ல் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, 419 படங்கள், இந்தாண்டு போட்டியிட்டன. இவற்றில் 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது, உத்தர்காண்ட் மாநிலம் வென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறந்த தமிழ்ப்படம் - பாரம்
சிறந்த நடிகர் : அந்தாதுண் படத்திற்காக ஆயுஷ்மான் குரானா, உரி படத்திற்காக விக்கி கவுசல்
சிறந்த நடிகை - நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ்
சிறந்த ஆக்ஷன் திரைப்படம் : கேஜிஎப் சாப்டர் 1
சிறந்த நடனம் - பத்மாவத் படத்திற்காக கொமார்
சிறந்த சமூக கருத்து கொண்ட படம் : பேட்மேன்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - கேஜிஎப்