Advertisment

கெஜ்ரிவால் கைது: ”பயந்த சர்வாதிகாரி” என ராகுல் விமர்சனம்: எதிர்கட்சி தலைவர்கள் கருத்து என்ன?

முதல்வராக இருக்கும் ஒருவர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபட்டபோது இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள், அவரை பின் தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பினர். இந்த நடவடிக்கையால் மேலும் எதிர்கட்சிகள் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முதல்வராக இருக்கும் ஒருவர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யபட்டபோது  இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள், அவரை பின் தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பினர்.  இந்த நடவடிக்கையால் மேலும் எதிர்கட்சிகள் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளனர்.

Advertisment

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர்  பினராயி விஜயன், என்.சி.பி தலைவர் சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

ராகுல் காந்தி மோடியை ஒரு பயந்த சர்வாதிகாரி என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த கைது, ஜனநாயகத்தின் சாவுமணி என்றும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்கள், அர்வீந்தர் சிங், ஏ.ஏ.பி பையிடர் சந்தீப் திக்‌ஷித், ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

” ஊடங்கள் உட்பட எல்லா நிறுவனங்களையும் விலைக்கு வாங்கி, கட்சிகளை உடைத்து, நிறுவனங்களில் இருந்து மிரட்டி பணத்தை பறித்து, எதிர்கட்சியின் வங்கி கணக்கை முடக்கியும், அசுர சக்திக்கு போதவில்லை. ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரை கைது செய்வது ஒரு சாதாரண விஷயமாக மாறியிருக்கிறது. இதற்கு தகுந்த பதிலடி இந்தியா கொடுக்கும் “ என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் “ கர்வம் மிகுந்த பா.ஜ.க தனது வெற்றி குறித்து தினமும் பொய்யான விஷயங்களை பேசி வருகிறது. சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகளை பா.ஜ.க வலிமை இழக்க வைக்கிறது. பா.ஜ.க அதன் வெற்றியின் மீது நம்பிக்கை வைத்திருந்தால், ஏன் எதிர்கட்சியின் வங்கி கணக்கை முடக்க வேண்டும். எதிர்கட்சி தலைவர்கள் பா.ஜ.க வால் குறிவைக்கப்படுகிறார்கள். வருகின்ற தேர்தலில் பா.ஜ.க தோற்றுவிடும் என்று அஞ்சுவதால், எதிர்கட்சிக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் “ எதிர்வரும் நாடாளுமன்ற  தேர்தலில் எதிர்கட்சிகளை மெளனமாக்கும், இரக்கமற்ற செயல் இது. ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலை பார்த்து அஞ்சும் இவர்களது கோழைத்தனத்தை இது காட்டுகிறது. ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் ” ஒரு பாஜக தலைவர் கூட கைது செய்யப்படவில்லை. இது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல். எதிர்கட்சி தலைவர்களின் இடைவிடாத துன்புறுத்தல், பா.ஜ.க அரசின் சூனிய வேட்டையாகும். இது பா.ஜ.கவின் உண்மையான நிறத்தை வெளியே கொண்டு வந்துள்ளது. இந்த கைதுகள் இந்தியா கூட்டணியின் வெற்றிக்குதான் உதவும். பா.ஜ.க மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் கூறுகையில் “ தோல்வியடைந்துவிடுவோம் என்று பயத்தில் சிறைபட்டிருக்கும் நபர்கள், மற்றவரக்ளைதான் சிறையில் அடைக்க முயற்சிப்பார்கள். பா.ஜ.க விற்கு தாங்கள் மீண்டும் ஆட்சியமைக்க தேர்வு செய்யப்பட மாட்டோம் என்பது தெரிந்திருக்கிறது. இந்த பயம்தான், எதிர்கட்சி தலைவர்களை, மக்களின் பார்வையிலிருந்து நீக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.  இந்த கைது என்பது ஒரு சாக்குபோக்குதான். இந்த கைதுகள் புதிய மனிதர்கள் புரட்சி செய்ய வழிவகுக்கும்”  என்று தெரிவித்துள்ளார்.

 Read in english 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment