திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய ஆளும் பாஜக அரசு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு தர கூடாது என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கேரள சட்டமன்றத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், விமான நிலையங்களை குத்தகைக்குவிடும் அரசின் முடிவுற்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தார். எதிர்கட்சிகளின் ஆதரவுடன் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
தீர்மானத்தின் போது, மாநில அரசுகளின் பங்குகள் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள் மீது முடிவுகள் எடுத்துள்ளது. ஆனால் இம்முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். எதிர்கட்சி தலைவர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்தாலும் மாநில அரசின் முடிவினை “இரட்டை நிலைப்பாடு” என்று விமர்சனம் செய்துள்ளனர்.
20ம் தேதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஓ. ராஜகோபால் மட்டுமே கேரள சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரே பாஜக உறுப்பினராவார். தங்ககடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தினார். ஆனால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் பாஜக உறுப்பினர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் படிக்க : ”அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி உடனே கிடைக்காது” – ஏன் இவ்வாறு கூறுகிறார் மருத்துவர் ககன்தீப்?