கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில், பட்டப்பகலில் சிறுமி தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி எம்.எல்.ஏ உமா தாமஸ் முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் ஏ.என். ஷம்தீர் அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரமடைந்தனர்.
ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்டப்பேரவையில் நடந்த போராட்டம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே புதன்கிழமை கைகலப்பில் முடிந்தது.
இதில் திருவனந்தபுரத்தில் உள்ள 4 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 5 பாதுகாப்பு ஊழியர்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் சிறுமி தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி எம்.எல்.ஏ உமா தாமஸ் முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் ஏ.என். ஷம்சீர் அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரமடைந்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஷம்சீருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அவரது அறையை நோக்கி சென்றனர். அவர்கள் சபாநாயகர் அலுவலகம் முன் அமர்ந்து கண்டன பதாகையை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை அப்புறப்படுத்த பாதுகாப்பு ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சி கைகலப்பில் முடிந்தது. மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனை பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
பதற்றம் அதிகரித்ததால், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பெஞ்சில் இருந்து ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் கைகலப்பில் இணைந்தனர். சபாநாயகர் அலுவலக வளாகத்தில் இருந்து பல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சனீஷ் குமார் ஜோசப் சுருண்டு விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.கே. ராமா, ஆளும் சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர் எச். சலாம் தன்னை எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸ்களுக்கு சபாநாயகர் பலமுறை அனுமதி மறுத்ததாகவும், அதற்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
“முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய எந்த நோட்டீஸையும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். சட்டசபையில் செயல்படுத்தப்படுவது முதல்வர் குடும்பத்தின் நிகழ்ச்சி நிரல். பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் சட்டமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டபோது, எதிர்க்கட்சியின் முதுகெலும்பாக வாழைத்தண்டு உள்ளது என்று கூறி எதிர்க்கட்சிகளை அவமதிக்கும் சந்தர்ப்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இது சட்டவிரோதமானது. மேனேஜ்மென்ட் கோட்டாவில் அமைச்சராகி விட்டார்” என்றார்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ரியாஸ், எதிர்க்கட்சி தலைவர் அமைச்சர்களை அவமதிப்பதாக தெரிவித்தார். “நான் உட்பட நாங்கள் அனைவரும் ஒரு அரசியல் கட்சியில் அமைச்சர்களாகிவிட்டோம். சதீசன் பா.ஜ.க.வின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். பா.ஜ.க-வுக்கு எதிராக குரல் எழுப்ப அவர் தயாராக இல்லை” என்று ரியாஸ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“