Advertisment

பழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

Geographical Identity Tag : புவிசார் குறியீடு வழங்கும் பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, பிறஇடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Geographical Identity,Tirur Betel Leaf,Palani Panchamirtham, பழநி பஞ்சாமிர்தம், கேரளா, வெற்றிலை, திருப்பதி லட்டு, புவிசார் குறியீடு

Geographical Identity,Tirur Betel Leaf,Palani Panchamirtham, பழநி பஞ்சாமிர்தம், கேரளா, வெற்றிலை, திருப்பதி லட்டு, புவிசார் குறியீடு

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

புவிசார் குறியீடு பெறுவதன் மூலம், அந்த பொருட்களுக்கு மதிப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, அதன் உற்பத்தி பொருட்களுக்கு அதிகப்படியான விலையும் நிர்ணயிக்கப்படுவதால், அதுசார்ந்த மக்களுக்கு பயன்கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த பொருள் தரத்துடன், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும். புவிசார் குறியீடு வழங்கும் பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, பிறஇடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

தமிழக கோயில்களில் முதன்முறையாக பிரசாதத்திற்கென புவிசார் குறியீடு பெறுவது பழநி பஞ்சாமிர்தத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயார் செய்தால் அதிபட்சம் 15 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தலாம்.

கேரளாவின் திரூர் வகை வெற்றிலை, திரூர், தனூர், திருரங்காடி, குட்டிபுரம், மலப்புரம் மற்றும் வெங்காரா பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த வகை வெற்றிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.

டார்ஜிலிங் டீ, திருப்பதி லட்டு, காங்ரா ஓவியங்கள், நாக்பூர் ஆரஞ்சு மற்றும் காஷ்மீர் பஷ்மினாவுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment