கேரள பிஷப் கவுன்சில்: அக்டோபர் 30-ல் போப் ஆண்டவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

“புனித போப் ஆண்டவர் பிரான்சிஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான சந்திப்பு அக்டோபர் 30 சனிக்கிழமை நடைபெறும்” என்று கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவர் கார்டினல் ஜார்ஜ் ஆலஞ்சேரி அதிகாரப்பூர்வ ஆதாரங்களைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Kerala bishops’ council, PM Modi to meet Pope on Oct 30, Pope Francis, Prime Minister Narendra Modi, கேரளா பிஷப் கவுன்சில், கேசிபிசி, ஜி 20 மாநாடு, புனித போப் பிரான்ஸிஸ், பிரதமர் நரேந்திர மோடி, போப் ஆண்டவர், பிரதமர் நரேந்திர மோடி போப் ஆண்டவர் சந்திப்பு, KCBC president Cardinal George Alenchery, G-20 Summit, World Leaders’ Summit of COP-26

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐரோப்பா பயணத்தின் போது போப் பிரான்சிஸ் உடன் வெள்ளிக்கிழமை முதல் முறைசாரா சந்திப்பில் ஈடுபடுவார் என்று கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

“புனித போப் பிரான்சிஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான சந்திப்பு அக்டோபர் 30ம் தேதி சனிக்கிழமை நடைபெறும்” என்று கேரள கத்தோலிக்க பிஷப்களின் கவுன்சில் தலைவர் கார்டினல் ஜார்ஜ் ஆலஞ்சேரி அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த வருகையை வாட்டிக்கன் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு காலை 8.30 மணிக்கு திட்டமிடப்பட்ட்டுள்ளதாகவும் அப்போது இருவருக்குமிடையில் 30 நிமிடம் தனிப்பட்ட்ட உரையாடல் நடைபெறும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு என்று வர்ணித்த கார்டினல் ஆலஞ்சேரி, இது “நமது நாட்டிற்கும் வாட்டிக்கன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவுகளுக்கு மேலும் சக்தியையும் அரவணைப்பையும் சேர்க்கும்” என்று கூறினார்.

பிதமர் நரேந்திர மோடி அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை ரோம் மற்றும் கிளாஸ்கோவுக்கு பயணம் செய்து முறையே ஜி-20 உச்சி மாநாடு மற்றும் உலகத் தலைவர்களின் சிஓபி-26 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala bishops council statement pm modi to meet pope on oct 30

Next Story
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express