கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியை உலுக்கியதாகக் கூறப்படும் ஹவாலா வழக்கு எனக் கூறப்படும் நெடுஞ்சாலை கொள்ளை குறித்து விசாரணை செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு, பாஜக தேசியத் தலைமை மூன்று உறுப்பினர்களைக் கொண்ட “சுயாதீன” குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கட்சிக்கு வழங்கப்பட்ட தேர்தல் நிதிகளின் பயன்பாடு குறித்த அறிக்கைகளையும் கேட்டுள்ளது.
பாஜக கட்சியுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான சி.வி. ஆனந்த போஸ், ஜேக்கப் தாமஸ் மற்றும் இ.ஸ்ரீதரன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய பாஜகவிலிருந்து மாநில பிரிவுக்கு அனுப்பப்பட்ட நிதி குறித்து பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் பேசிய பின்னர் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான தாமஸ் மற்றும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதரன் ஆகியோர் ஏப்ரல் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டாலும், அவர்கள் சமீபத்தில் கட்சியின் தீவிர உறுப்பினர்களாக இல்லை, எனவே எந்தவொரு குறிப்பிட்ட பிரிவையும் சேர்ந்தவர்கள் என்று கருதப்படவில்லை. மற்றொருவரான போஸ் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.
அவர்களில் ஒருவர், அவர்களது அறிக்கை தேசிய தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல்களில் அவமானகரமான செயல்திறனுக்குப் பின்னர், கட்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளால் மாநில தலைமை மீது புகார்களும் மற்றும் தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. மேலும், மாநிலங்களவை எம்.பி. சுரேஷ் கோபியிடம் மாநிலத் தலைவர்களிடமிருந்து "தகவல்களை சேகரிக்க" மத்திய தலைமை கேட்டுக் கொண்டது. .
சுயாதீனமாகக் கருதப்படும் ஒரு குழுவிடம் அறிக்கை பெற மத்திய தலைமை எடுத்துள்ள நடவடிக்கை முக்கியமானது. ஏனெனில் மாநில விவகாரங்களுக்குப் பொறுப்பானவரான பொது செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் மீது கேரள பாஜக தலைவர்களில் ஒரு பகுதியினர் மத்திய தலைவர்களிடம் புகார் அளித்துள்ள நேரத்தில் இந்த அறிக்கை பெறும் முடிவு வந்துள்ளது.
"கணக்கிடப்படாத தேர்தல் நிதி" என்று சந்தேகிக்கப்படும் ரூ .3.5 கோடி நெடுஞ்சாலை கொள்ளை தொடர்பாக கேரளாவில் ஏராளமான பாஜக தலைவர்கள் கேரள காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவர்களும், சுரேந்திரனின் தனிப்பட்ட உதவியாளரும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர்.
பழங்குடி மக்களின் தலைவரும், ஜனாதிபத்திய ராஷ்டிரிய சபா கட்சியின் தலைவருமான சி.கே.ஜானு, மாநில பாஜக தலைவர் சுரேந்திரனிடமிருந்து ரூ .10 கோடியைக் கோரியதாகவும், இறுதியாக ரூ .10 லட்சத்திற்குத் உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. உடன் ஜானு சேர்வதற்கான ஏற்பாடாகும்.
பின்னர், சுரேந்திரன் போட்டியிட்ட இடங்களில் ஒன்றான மஞ்சேஸ்வரம் தொகுதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கே.சுந்தராவுக்கு, வேட்புமனுவை வாபஸ் பெற ரூ .2.5 லட்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டு எழுந்தபோது கட்சி கோபமடைந்தது. இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
இந்த சர்ச்சைகள் நம்பகமான அரசியல் மாற்றாக உருவாகும் பாஜகவின் வாய்ப்புகளை மோசமாக்கியுள்ளதாக தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டாலும், தேசியத் தலைமை, மாநிலத் தலைவர்கள் தங்கள் செயலை ஒன்றிணைத்து ஒரே ஒரு பிரிவாக வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, மாநில பாஜக முக்கிய மையக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, கட்சியின் முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன், ஆளும் சிபிஐ-எம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸூம் பாஜக தலைவர் சுரேந்திரனை "குறிவைப்பதாக" குற்றம் சாட்டினார். "பாஜக அதை அனுமதிக்காது" என்றும் ராஜசேகரன் கூறினார்.
கேரள பாஜக வட்டாரங்கள் கூறுகையில், தூய்மையான அரசியல்வாதி என்ற பிம்பத்தை கொண்டுள்ள கும்மனம் ராஜசேகரனை தேசிய தலைமை, மாநில பாஜக கட்சியை பாதுகாக்கும் பொறுப்பில் வைத்துள்ளது.
ஆதாரங்களின்படி, கொள்ளை வழக்கில் பாஜகவின் தற்காப்பு நடவடிக்கைகள், கட்சியின் முக்கிய குழு கூட்டத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த வழக்கில் கட்சியின் "மறுப்பு தெரிவிப்பது" அதாவது தன்னை பாதுகாத்துக் கொள்வது அதன் இமேஜையும் நம்பகத்தன்மையையும் மேலும் பாதிக்கக்கூடும் என்று தலைவர்களில் ஒரு பகுதியினர் எச்சரித்துள்ளனர். "நாங்கள் பொதுமக்கள் முன் ஏளனம் செய்யப்படுவோம்" என்று ஒரு தலைவர் எச்சரித்தார்.
"கட்சிக்குள் இருக்கும் குருப்பிஸம் தான் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் அவமானகரமான தோல்விக்கு மட்டுமல்லாமல், அண்மையில் கட்சியின் பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் சிதைக்கின்ற சர்ச்சைகள் தீவிரமடைவதற்கு காரணம்," என்று கேரளாவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
"கட்சி ஒன்றுபட்டிருந்தால் நெடுஞ்சாலை கொள்ளை வழக்கு வெளியே வந்திருக்காது. இது பிரிவினைவாதத்தால் மட்டுமே அம்பலமானது, ”என்று அந்த மூத்த தலைவர் கூறினார். இது மாநில அளவில் தீர்க்கப்பட்டிருக்கும். கட்சியில் ஒரு பிரிவினர் தான் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர், ஏனெனில் கட்சி “நிதி அவர்களிடமோ அல்லது வேட்பாளர்களிடமோ அடையவில்லை என்பது தான் இந்த பிரச்சனை வெளிவந்ததற்கு காரணம். "இப்போது இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஒரு பெரிய சங்கடமாகிவிட்டது, ஏனென்றால் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்களும் அதில் இழுக்கப்படுகின்றன," என்று அந்த தலைவர் சுட்டிக்காட்டினார்.
பாஜக சட்டசபையில் தனது ஒரே ஒரு இடமான நெமோமை சிபிஐ-எம்மிடம் இழந்தது, அதன் வாக்குப் வங்கி 2016 சட்டமன்றத் தேர்தலில் 14.46 சதவீதத்திலிருந்து தற்போது, 11.30 சதவீதமாக சரிந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.