Kerala Lok Sabha Election Results | கேரளாவில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் மாநிலத்தில் அமோக வெற்றியை நோக்கி செல்கிறது.
அக்கட்சி 20 இடங்களில் 17 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளிலும், எல்டிஎஃப் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
கேரளாவின் திருச்சூரில் பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபி முன்னிலை வகிக்கிறார். சிபிஐயின் விஎஸ் சுனில் குமார் மற்றும் காங்கிரஸின் கே முரளீதரனை விட சுரேஷ் கோபி தெளிவாக முன்னிலை வகித்து வருகிறார்.
வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து 1.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார், நட்சத்திர வேட்பாளர்களான சசி தரூர் மற்றும் கே கே ஷைலஜா ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
சுரேஷ் கோபி வெற்றி பெற்றால்? கேரளத்தில் பா.ஜ.க வென்ற முதல் தொகுதியாக அது இருக்கும்.
இதற்கிடையில், வடகரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பில் 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். CPI(M)-ன் போட்டியாளர் KK ஷைலஜா தோல்வி முகமாக காணப்படுகிறார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Kerala Election Results 2024 Live: UDF leads in 17 seats, BJP in 2, LDF in 1, Suresh Gopi leads by 61,000 votes, Shashi Tharoor and Shailaja trail
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“