Advertisment

கொச்சி குண்டுவெடிப்பு: அவர் பிரச்சனை செய்பவர் அல்ல- டொமினிக் மார்ட்டின் வாக்குமூலத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி

அவர் பிரச்சனை செய்பவர் அல்ல. அவருக்கு நண்பர்கள் அதிகம் இல்லை ஆனால் எதிரிகளும் இல்லை. அவர் வாடகை செலுத்த தவறியதில்லை. அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை.

author-image
WebDesk
New Update
kerala blasts

Kerala blasts

கேரளா மாநிலம் களமசேரியில் ஜெகோவா வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார்.

Advertisment

இதையடுத்து குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், டொமினிக் மார்ட்டின் என்ற நபர், தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அது IED குண்டுவெடிப்பு என்பது தெரியவந்தது. மாநாட்டு மையத்தின் நடுவே குண்டுவெடிப்பு நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். முதல் குண்டுவெடிப்பு பிரார்த்தனை அமர்வு தொடங்கிய பின்னர் காலை 9.30 மணியளவில் ஏற்பட்டது.

இதனிடையே, களமசேரி குண்டுவெடிப்புக்கு காரணமான டொமினிக் மார்ட்டின் சனிக்கிழமை இரவு தனது மனைவியிடம், ஞாயிற்றுக்கிழமை காலை நண்பரை சந்திக்கப் போவதாகக் கூறிவிட்டு, அதிகாலை 5 மணியளவில் கொச்சி தம்மனத்தில் உள்ள வாடகை வீட்டில் இருந்து வெளியேறினார்.

அவர் தினமும் அதிகாலையில் எழுந்து விடுவார் என்று அவருடைய மனைவி என்னிடம் கூறினார். இன்றும் அதிகாலை எழுந்து டூ விலரில் புறப்பட்டார். முந்தைய நாள் இரவு கூறியது போல் அவர் தனது நண்பரை சந்திக்கப் போகிறார் என்று அவரது மனைவி நினைத்தார், என்று உள்ளூர் கவுன்சிலர் சாக்கீர் தம்மானம் (57) கூறினார்.

மார்ட்டினை அறிந்திருப்பதாகக் கூறக்கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

குண்டுவெடிப்புகளுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரண்டு பேர் இறந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர், யெகோவாவின் சாட்சிகளில் இருந்து விலகிய உறுப்பினரான மார்ட்டின், செயலுக்கு பொறுப்பேற்று ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

மார்ட்டின் அவரது  மனைவி, மகன் மற்றும் மகள் - கடந்த ஐந்து ஆண்டுகளாக காதர் லேனில் உள்ள 2 படுக்கையறை வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த வீட்டு உரிமையாளர் ஜலீல் அதிர்ச்சியடைந்தார்.

அவர் பிரச்சனை செய்பவர் அல்ல. அவருக்கு நண்பர்கள் அதிகம் இல்லை ஆனால் எதிரிகளும் இல்லை. அவர் வாடகை செலுத்த தவறியதில்லை. அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை.

நான் காலையிலிருந்து குண்டுவெடிப்புச் செய்திகளைப் பார்த்து கொண்டிருந்தேன், திடீரென்று மதியம், அவரது மனைவி கீழே வந்து, அவனுடைய வீடியோவைப் பற்றி சொன்னாள். அவனால் எங்களுக்கும் அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று மன்னிப்பு கேட்டாள், என்று ஜலீல் கூறினார்.

மார்ட்டின் கொச்சியில் உள்ள ஏலம்குளத்தைச் சேர்ந்தவர். எனக்கு தெரிந்து 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

டொமினிக் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் குழுவுக்குத் திரும்பினார். சில வருடங்களுக்கு முன்பு தம்மனத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் டுடோரியல் நடத்தி வந்தார்.

அதில் வருமானம் இல்லாததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுக்கு சென்றார். மகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து  இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திரும்பி வந்தார், ஏதாவது கடையைத் தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார், என்று சக்கீர் கூறினார்.

மார்ட்டின் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.

அவர் வாக்குமூலம் அளித்து கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து, அவரது மனைவியும் மகளும் உடைந்து போயுள்ளனர். அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்க முயற்சித்து வருகிறோம். அவர் இந்தச் செயலைச் செய்தது அவர்களின் தவறில்லை, என்றார் ஜலீல்.

Read in English: ‘Was not a troublemaker’: Locals shocked over confession of Kochi blast accused

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment