Advertisment

வளைகுடாவில் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்த டொமினிக்: கேரளா குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

வெடிபொருட்கள் தயாரிப்பது எப்படி என்பது குறித்து டொமினிக் மார்ட்டின் இணைய தளத்தில் தேடி விரிவாகப் படித்துள்ளார். கொச்சி தம்மனத்தில் உள்ள அவரது வீட்டில் ஐ.இ.டி குண்டுகளை தயாரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kerala blast.jpg

கொச்சி கிறிஸ்துவ ஜெப கூட்ட குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டொமினிக் மார்ட்டின் 2  மாதங்களுக்கு முன்பு வரை மத்திய கிழக்கு நாட்டில் எலக்ட்ரிக்கல் ஃபோர்மேனாக பணிபுரிந்துள்ளார். மேலும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஐ.இ.டி குண்டு தயாரிப்பது எப்படி என்பது குறித்தும் அவர் கற்றுள்ளார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Advertisment

வெடிபொருள் தயாரிப்பது எப்படி என்பது குறித்து டொமினிக் மார்ட்டின் இணைய தளத்தில் தேடி விரிவாகப் படித்துள்ளார். கொச்சி தம்மனத்தில் உள்ள அவரது வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐ.இ.டி குண்டுகளை தயாரித்துள்ளார். அதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை களமசேரியில் உள்ள ஜெப கூட்ட மாநாட்டு மையத்திற்கு பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்றுள்ளார். 

மாநாட்டு மையத்திற்கு பொதுமக்கள் வருவதற்கு முன் ஐ.இ.டி குண்டுகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை வைத்துள்ளார். குண்டுகளை வைத்து விட்டு மையத்திற்கு அருகில் சிறிது நேரம் காத்திருந்து 2 ரிமோட்களைப் பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து டொமினிக் தனது இருசக்கர வாகனத்தில்  சென்று திருச்சூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். தொடர்ந்து ஹோட்டலில் அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரம் தங்கியிருந்த அவர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

திங்களன்று, டொமினிக் மார்ட்டின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர் முறையாக கைது செய்தனர்.  உபா, வெடிபொருள் சட்டம் மற்றும் ஐ.பி.சி பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் தலைமையிலான போலீஸார் அவரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு, எந்த ஒரு கூட்டாளியும் இல்லாமல் தானே செயல்படுத்தியதாக மார்ட்டினின் கூற்றுக்களைப் பற்றி போலீசார் விசாரித்தனர். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/kerala-blasts-toll-3-accused-did-electrical-work-in-gulf-officials-9006641/

தொடர்ந்து, கொச்சி நகர போலீஸ் கமிஷனர் அக்பர் கூறுகையில், குண்டுவெடிப்பில் அவர் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரம் உள்ளது என்றும் கூறினார். 

கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள ஜம்ரா மாநாட்டு மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்.29)  கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர்  யெகோவா சாட்சிகள் சார்பில் ஆண்டு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக  தொடர்ச்சியாக 3 முறை குண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தன. இதில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 3- ஆக உயர்ந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Kerala State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment