கேரளத்தில், ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மாலை 3 மணிக்கு நடைபெறும். ஒவ்வொரு லாட்டரியும் அகரவரிசைக் குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.
மேலும், பம்பர் லாட்டரி குறியீடு "BR" பிரதிநிதித்துவம் குறியீட்டுடன் டிரா எண்ணைக் கொண்டுள்ளது. முதல் பரிசு வென்றவருக்கு பம்பர் 25 கோடி ரூபாய் வழங்கப்படும்.
பரிசுத் தொகை
முதல் பரிசு: ரூ 25 கோடி
2வது பரிசு: ரூ. 1 கோடி
3வது பரிசு: ரூ. 50 லட்சம்
4வது பரிசு: ரூ. 5 லட்சம்
5வது பரிசு: ரூ. 2 லட்சம்
6வது பரிசு: ரூ. 5000
7வது பரிசு: ரூ. 2000
8வது பரிசு: ரூ. 1000
9வது பரிசு: ரூ. 500
ஆறுதல் பரிசு: ரூ. 5 லட்சம்
முதல் பரிசு
இந்த நிலையில் முதல் பரிசு கோழிக்கோட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அந்த அதிருஷ்ட எண் 230662 ஆகும். தொடர்ந்து, இந்தப் பரிசை தட்டிச் சென்றவர் யார் என்ற பேச்சுகள் பரபரப்பாக்கின.
எனினும் லாட்டரி சீட்டை பெற்ற உரிமையாளர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் அதிருஷ்டத்துகுரிய லாட்டரி சீட்டின் உரிமையாளர் கோவை அன்னூரை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் நடராஜன் என்பதும் தெரியவந்தது.
இவர் மொத்தம் 10 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு சீட்டுக்கு ரூ.25 கோடி ரூபாய் விழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“