Advertisment

வெளியாகும் முன்னரே கசிந்த கம்யூனிஸ்ட் தலைவரின் ‘சுயசரிதை’: கேரளாவில் புதிய புயலை கிளப்பியிருப்பது எப்படி?

கேரள சி.பி.ஐ (எம்) கட்சியின் மூத்த தலைவர் ஈ.பி.ஜெயராஜன் எழுதிக் கொண்டிருக்கும் சுயசரிதை புத்தகத்தின் பிரதிகள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala bypolls CPIM veteran E P Jayarajan autobiography Tamil News

கசிந்துள்ள அந்தப் புத்தகம் இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் நிர்வாகத்தை விமர்சிக்கிறது.

கேரளாவில் முதல்வர் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பாலக்காடு மற்றும் செலக்கரா ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும், வயநாடு மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

Advertisment

இதனிடையே, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ (எம்)) மூத்த தலைவர் ஈ.பி.ஜெயராஜன் எழுதிக் கொண்டிருக்கும் சுயசரிதை புத்தகத்தின் பிரதிகள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் ஈ.பி.ஜெயராஜன் தற்போது, “கருப்புத் தேநீரும் பரூப்பு வடையும் – கம்யூனிஸ்ட்டின் வாழ்க்கை” என்கிற தலைப்பிட்ட புத்தகத்தை எழுதி வருகிறார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Amid Kerala bypolls, how CPI(M) veteran’s ‘autobiography’ has stirred up a fresh storm

200 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், புத்தகத்தை விளம்பரம் செய்வதற்காக புத்தக வெளியிட்டாரான டி.சி புக்ஸ் பப்ளீசிங் ஹவுஸ் அதன் சமூக வலைதள பக்கங்களில், புத்தகத்தின் அட்டைப் பக்க புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. 

இதற்கிடையில், ஈ.பி.ஜெயராஜன் எழுதிக் கொண்டிரும் புத்தகத்தின் 180 பக்கங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தற்போது கசிந்துள்ள புத்தகத்தில் இருக்கும் விடயங்கள் சி.பி.ஐ (எம்) கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புத்தக வெளியீட்டைத் தற்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறது  டி.சி புக்ஸ். 

இது குறித்து கேரளாவின் முன்னணி புத்தக பதிப்பகமான டி.சி புக்ஸ் அதன் ஃபேஸ்புக் பதிவில், “ 'புத்தகத்தில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறு’ காரணமாக கருப்பு தேநீர் மற்றும் பருப்பு வடை புத்தகம் வெளியீடு சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புத்தகம் வெளியிடப்படும்போது உள்ளடக்கம் பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியும்” என்று தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ (எம்) கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான ஜெயராஜன், தனது சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் 200 பக்கங்கள் (தற்செயலாக, கசிந்த வரைவு சுமார் 180 பக்கங்கள்) முடித்திருப்பதாகவும், நம்பகமான பத்திரிகையாளருக்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்புக்கொண்டார். ஆனால் எந்தவொரு வெளியீட்டாளருக்கும் தனது புத்தகத்தை வெளியிட அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் மறுத்து இருக்கிறார். 

“எனது அனுமதியின்றி அவர்கள் (டி.சி புக்ஸ்) எப்படி (உள்ளடக்கத்தை) வெளியிட முடியும். நான் இன்னும் எனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் அவர்களின் முகநூல் பக்கத்தைஇன்னும் பார்க்கவில்லை,” என்றும் ஜெயராஜன் கூறியிருக்கிறார்.

இருப்பினும், டிசி புக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரவி டி.சி, இந்த பிரச்சினையில் தங்களது பதிப்பகம் என்ன சொல்ல விரும்புகிறது என்பதை பேஸ்புக் பதிவு மூலமாக கூறியிருந்தார். அதில், “நாங்கள் உதவியாளர்கள் மட்டுமே. பொது நபர்களை மதிக்கிறோம். எனவே, நாங்கள் இப்போதைக்கு எந்தவித கருத்துகளும் கூறமுடியாது.  

சுயசரிதை இடைத்தேர்தலுக்குப் பிறகு வெளியிடப்பட இருந்தது. வாக்களிக்கும் முன் சுயசரிதை வெளியிடப்பட்டால், அது சர்ச்சைக்குரியதாகிவிடும். தேர்தலுக்குப் பிறகு, எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறலாம்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஜெயராஜன் எழுதிக் கொண்டிருக்கும் அந்தப் புத்தகம் "சந்தர்ப்பவாத அரசியல்" பற்றி பேசுகிறது. “சந்தர்ப்பவாத அரசியலைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, ​​காங்கிரஸால் சீட் மறுக்கப்பட்டதால், ஒரே இரவில் எல்.டி.எஃப்-க்கு மாறிய பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் சிபிஐ(எம்) ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பி.சரின் பற்றி குறிப்பிட வேண்டும். அத்தகைய வேட்பாளர்கள் பதவிகளால் உந்தப்பட்டவர்களா என்பது ஆராயப்பட வேண்டும். சரினை ஆதரிக்கும் முடிவு சரியா தவறா என்பதை காலம்தான் சொல்லும்,” என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், கசிந்துள்ள அந்தப் புத்தகம் இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் நிர்வாகத்தை விமர்சிக்கிறது. மேலும், கடுமையான நிறுவன மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை திருத்தங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது.  

"முதல் பதவிக்காலம் மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதனை அவர்களால் தக்கவைக்க முடியவில்லை. நாம் எந்த அளவிற்கு நம்மைத் திருத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது முன்னோக்கிய பயணம் அமையும்” என்று அந்தப் புத்தகம்  கூறுகிறது.

கேரளாவில் இடதுசாரிகள் வலுவிழந்து வருவதாகவும், எல்.டி.எஃப் கன்வீனர் பதவியில் இருந்த ஜெயராஜனை கட்சி "புரிந்துகொள்ளவில்லை" என்றும், அவரை ஆகஸ்ட் மாதம் பதிவியில் இருந்து தூக்கிவிட்டதாகவும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. "நான் போலி உருவ உருவாக்கத்திற்கு பலியாகியுள்ளேன், எனது நட்பு பல வழிகளில் விளக்கப்பட்டுள்ளது. அரசியலில் எனது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, புத்தகம் கசிந்ததற்குப் பின்னால் "சதி" இருப்பதாகக் குற்றம் சாட்டி, ஜெயராஜன் கடந்த புதன்கிழமை காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் டி.சி புக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் விளம்பர சமூக வலைதள பதிவுகளை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தினார்.

நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் பாலக்காட்டில் அவரது "வெளிப்பாடுகள்" கட்சியின் வாய்ப்புகளை பாதிக்கும் என்று தோன்றியதால், ஜெயராஜன் வியாழனன்று சரின் பிரச்சாரத்திற்காக தொகுதிக்கு விரைந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சி.பி.ஐ.(எம்) அதைக் குறைக்க முயன்றது. “சதி இருப்பதாகக் கூறிய அவர் (ஜெயராஜன்) இந்த விஷயம் எப்படி கசிந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். அவரது விருப்பப்படியே கட்சி செல்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறியுள்ளார். 

ஜெயராஜன் கடந்த 2 ஆண்டுகளாக கோவிந்தனை மாநிலச் செயலாளராக தேர்வு செய்ததையடுத்து, அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் கேரள பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்ததற்காக எல்.டி.எஃப் கன்வீனர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார், ஏப்ரல் 26 அன்று கேரளா அதற்கு வாக்களித்ததால் அது பகிரங்கமானது.

கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்த புத்தகம் ஜெயராஜனால் எழுதப்பட்டது என்பது தெரியும் என்று கூறினார். “இப்போது, ​​இடைத்தேர்தல் காரணமாக, அவரும் (ஜெயராஜனும்) அவரது கட்சியும் பொய் சொல்கிறார்கள். சிபிஐ(எம்) கட்சியில் உள்ள அவரது நண்பர்கள் அல்லது எதிரிகள் இதற்குப் பின்னால் இருக்கிறார்களா என்பதை கட்சி விசாரிக்கட்டும்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment