/tamil-ie/media/media_files/uploads/2020/07/EcNb2FWVcAAUTGd.jpg)
Kerala capital Thiruvananthapuram to undergo lockdown for a week
Kerala capital triple lockdown : இந்தியாவிலேயே முதன்முதலில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதி கேரளம் தான். 100 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்றினை கட்டுக்குள் வைத்திருந்தது அம்மாநில அரசு. மேலும் அந்த காலகட்டத்தில் கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 2 தான்.
ஆனால் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தொடர்ந்து சொந்த மாநிலத்திற்கு மக்கள் படையெடுத்து வந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியது.
மேலும் படிக்க : சென்னையில் கொரோனா பரவல் விகிதம் கட்டுக்குள் வந்தது: ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
Triple lockdown photos from Thiruvananthapuram
இது வரை அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5429 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 26 ஆக அதிகரித்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது அம்மாநில அரசு. அதன்படி இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் வங்கிகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து இயங்கும் என்று கூறியதுள்ளது அம்மாநில அரசு. அம்மாநில தலைமை செயலகம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற பெரும் நகரங்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.