கேரளா : தேவாலய கல்லறையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதி சடங்கு

இதனை தன்னுடைய பொறுப்பாக உணர்ந்ததாக பாதிரியார் மேத்யூ கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஒரு அசாதாரணமான நாளாகும்.

Kerala cemetery holds cremation of Hindu man who died of Covid

Shaju Philip 

Kerala cemetery holds cremation of Hindu man who died of Covid: கொரோனா வைரஸால் உயிரிழந்த இந்து ஒருவரை தங்களின் கல்லறையில் தகனம் செய்ய அனுமதித்தது கேரளாவின் ஆலப்புழாவில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலயம். தேவாலயத்தின் நடவடிக்கையை அம்மாநில முதல்வர் பாராட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு, எடத்துவாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் கல்லறையில் 86 வயதான கே.ஸ்ரீநிவாசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

வியாழக்கிழமை அன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அந்த தேவாலயத்தை பாராட்டினார். தேவாலய கல்லறையில் அந்த திருச்சபையின் உறுப்பினராக இல்லாத ஒரு கோவிட் -19 நோயாளியின் இறுதி சடங்கை அனுமதித்த எடத்துவாவின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : ஆற்றைக்கடந்து, மலையேற்றம் செய்து பழங்குடி மக்களுக்கு சிகிச்சை; கேரள மருத்துவ குழுவிற்கு குவியும் பாராட்டு

தமிழ் வம்சாவளியான அவர் செவ்வாய்க்கிழமை காலையில் மரணம் அடைந்தார். பொதுத்தகன வளாகம் அந்த பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் அவருடைய வசிப்பிடமும், தோட்டமும் மழை நீரால் சூழப்பட்டிருந்தது.

தொடர்ந்து மரணங்கள் நிகழ்வதால், சவக்கிடங்கில் நீண்ட நேரத்திற்கு எங்களால் உடல்களை வைக்க இயலவில்லை. நாங்கள் தேவாலய பாதிரியார் மேத்யூ சூராவாடியிடம் இது குறித்து ஆலோசனை செய்த போது, சிறிது யோசித்தார். திருச்சபை உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட பிறகு அவர் தேவாலய கல்லறையிலேயே இறுதி சடங்கை நடத்தலாம் என்று கூறினார் என்று எடத்துவா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் எம்.டி. தாமஸ் கூறினார்.

இதனை தன்னுடைய பொறுப்பாக உணர்ந்ததாக பாதிரியார் மேத்யூ கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது ஒரு அசாதாரணமான நாளாகும். நெருக்கடி நேரத்தில் நாம் அனைவரும் தேவை என்னவோ அதனை ஆதரிக்க வேண்டும். கல்லறையில் ஒரு இந்துவிற்கு தகனம் செய்வது ஒரு கிறித்துவ அன்பை நிரூபிக்க உருவாகிய தருணமாகும் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala cemetery holds cremation of hindu man who died of covid cm lauds

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com