பெங்களூரைச் சேர்ந்த வீணாவின் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் கொச்சி மினரல்ஸ் ரூட்டில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் சென்னையில் உள்ள தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் ( SFIO- serious fraud investigation office) திங்கள்கிழமை ஆஜரானார்.
அவர் SFIO அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 2 மணி நேரம் இருந்ததாகவும், விசாரணை தொடர்பான சில ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது.
முன்னதாக, கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் எஸ்.எஃப்.ஐ.ஓ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விசாரணை அமைப்பு கோரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வீணாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தென்னிந்தியாவிற்கான ஏஜென்சியின் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜர் ஆகி ஆவணங்களை சமர்ப்பித்தார்.
மென்பொருள் தீர்வுகளை தயாரிப்பதற்கான வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்தை CMRL ஈடுபடுத்தியதால் இந்த வழக்கு இரு நிறுவனங்களுக்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பானது. 2019-ல் CMRL-ல் வருமான வரி சோதனையின் போது இரு வனங்களுக்கு இடையேயான நிதி பரிவர்த்தனைகள் குறித்து தெரியவந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு SFIO இந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“