கேரளாவில் சீரமைப்புப் பணிகள் : கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையின் அளவு குறைந்ததாலும் வெள்ள நீர் வடிந்து வருவதாலும் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்கிறார்கள்.
ஆனால் வீட்டில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தால் அவர்களால் தற்போது அத்யாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு போன்ற காரணங்களால் வீடுகள் அனைத்தும் பலத்த சேதாரம் அடைந்துள்ளது.
கேரளாவில் சீரமைப்புப் பணிகள்
கேரளாவில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிய கேரளத்தை தான் உருவாக்க இயலும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அம்மாநிலம். கேரளாவில் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தால் சேதாரமான வீடுகளை சீரமைப்பு செய்வதற்காக ஒரு லட்ச ரூபாய் வரையில் வட்டியில்லா கடன் தர தீர்மானித்திருக்கிறது கேரள அரசு.
கேரளாவிற்கு உதவ விரும்பிய பாகிஸ்தான் பிரதமர் செய்தியை படிக்க
பெண்களை வீட்டின் குடும்பத்தலைவர்களாக கொண்டு செயல்படும் வீடுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் கடன் தரப்படும் என்றும், அதற்கான வட்டியினை கேரள அரசே முன்னின்று ஏற்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடியத் தொடங்கிய பின்பு இதுவரை சுமார் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
மழையால் பாதிப்படைந்த சுமார் 50 துணை மின் நிலையங்களில் 41 மின் நிலையங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இயல்பு வாழ்விற்கு திரும்புகிறது கேரளா. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் மக்களுக்கு 5 கிலோ அரிசியினை தரவும் ஏற்பாடு செய்திருக்கிறது கேரள அரசு.