கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரளாவின் மிகப் பெரிய கலாச்சார திருவிழாவான திருச்சூர் பூரம் மற்றும் அரசியல் தலையீடுகளின் போது கடுமையான போலீஸ் கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஏப்ரல் 19 மற்றும் 20 தேதிகளில் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒரு பகுதியாக காவல்துறை கட்டுப்பாடுகளால், களையிழந்த கோயில் திருவிழா, மாநில அரசாங்கத்தை குழிக்குள் தள்ளியது.
அரசியல் பாதிப்பை தணிக்கும் வகையில், திருச்சூர் காவல்துறை ஆணையர் அங்கித் அசோக் மற்றும் உதவி ஆணையர் கே சுதர்சன் ஆகியோரை தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இடமாற்றம் செய்யுமாறு, காவல்துறை தலைமை இயக்குநருக்கு பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர், தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரத்திற்கு வரம்புகள் உள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் விதித்துள்ள தடையால், ஏப்ரல் 19ம் தேதி இரவு பூரத்தின் சில நிகழ்ச்சிகள் பாதியில் கைவிடப்பட்டது. தவிர, திருவிழா வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் 20-ம் தேதி, திட்டமிடப்பட்ட திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான வாணவேடிக்கை அன்றைய தினம் பகல் நேரத்தில் நடைபெற்றது.
வானவேடிக்கை நடத்துவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டபோது, திருச்சூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி, ஏப்ரல் 20 அன்று அதிகாலையில் கோயில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார், இது பகலில் வாணவேடிக்கை நடத்த வழிவகுத்தது.
காவல்துறையின் கட்டுப்பாடுகள், மாநிலத்தின் கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் திருச்சூரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பூரம் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தன.
திருச்சூர் மக்களின் இதயத்திற்கு நெருக்கமான பூரம் நடத்துவதில் சுரேஷ் கோபியின் ஈடுபாட்டை பாஜக முன்னிலைப்படுத்திய நிலையில், பிரசித்தி பெற்ற வடக்குநாதன் கோயிலில் திருவிழாவை நடத்துவதில் பாஜக தலையீடு செய்யும் சூழ்நிலையை விஜயன் தலைமையிலான போலீஸார் உருவாக்கிவிட்டதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
பூரம் போன்ற திருவிழா, சிபிஐ(எம்) மற்றும் பாஜகவின் மறைமுக செயல்திட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக மாறியது வருத்தமளிக்கிறது, என்று திருச்சூர் காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரன் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்த உணர்வை எதிரொலித்ததுடன், அரசாங்கம் ‘பூரம்’ வகுப்புவாதத்தை நடத்துவதாக குற்றம் சாட்டினார். “பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க காவல்துறை தலையீட்டை அரசாங்கம் அனுமதித்துள்ளது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், இடது ஜனநாயக முன்னணி திருச்சூர் மாவட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.வி. அப்துல் காதர், பூரம் குளறுபடிக்குப் பின்னால் சதி இருப்பதாகக் குற்றம் சாட்டினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டனர். பூரத்தில் போலீசாரின் தலையீடு குறித்து அரசும், தேர்தல் கமிஷனும் விசாரிக்க வேண்டும், என்றார்.
கடந்த இரண்டு நாட்களாக, இந்த விவகாரம் பெரிய அரசியல் பரிமாணத்தை எடுத்து வருகிறது.
சிபிஐ(எம்) ஆட்சியில் பூரம் தொடர்பான சர்ச்சைகளை சங்பரிவார் குழுக்கள் முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கீழ் 2018 இல் சபரிமலை கோவிலில் இளம் பெண்களின் சர்ச்சைக்குரிய நுழைவுடன் தொடர்புபடுத்தின.
பா.ஜ.க.வுக்கு அதிக பங்கு உள்ள திருச்சூரில் தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என அரசு அஞ்சுகிறது. எல்.டி.எப் வேட்பாளர் வி.எஸ்.சுனில் குமாரும் முன்னேற்றங்கள் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
Read in English: Kerala CM Pinarayi Vijayan orders police commissioner’s transfer as Thrissur Pooram curbs put CPM in damage control mode
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.