ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவரை எட்டி உதைத்த காவலர் சஸ்பெண்ட்

கேரளாவில், டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்தவரை ரயில்வே போலீஸ் எட்டி உதைக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கேரளாவில், டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்தவரை ரயில்வே போலீஸ் எட்டி உதைக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

author-image
WebDesk
New Update
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவரை எட்டி உதைத்த காவலர் சஸ்பெண்ட்

Kerala cop suspended for kicking passenger who travel without ticket: ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த நபரை ரயில்வே போலீஸ் ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் அந்த காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Advertisment

கேரளாவில், எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நபரை, டிக்கெட் பரிசோதகர், காவலர் ஒருவர் முன்னிலையில் மற்றொரு ரயில்வே காவலர் தொடர்ந்து எட்டி உதைத்தவாறே இருக்கிறார். 20 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தான் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவின் மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலானது, தலைநகர் திருவனந்தபுரத்திற்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கும் இடையே பயணிக்கக்கூடிய ஒரு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் கடந்த ஞாயிறன்று மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டிருந்த போது கன்னூர் அருகே அதில் பயணம் செய்த ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ரயில்வே போலீசாரின் உதவியுடன் அந்த பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகே கீழே உட்கார வைத்திருந்த நிலையில் ஒரு போலீஸ்காரர் அந்த பயணியை தனது காலால் தொடர்ந்து எட்டி உதைத்து தள்ளுகிறார். டிக்கெட் பரிசோதகர் அருகில் இருந்தபோதும் அவரும் அதை தடுக்கவில்லை. இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பயணி வடகரை ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார். தற்போது சம்பந்தப்பட்ட காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: