பாஜகவின் தலைவரை கொலை செய்த விவகாரத்தி, குற்றம் சாட்டபட்ட 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதை கேரவளாவில் உள்ள ஆலப்புழா, மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கி உள்ளது.
பாஜகவின் ஓ.பி.சி பிரிவு செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசனை, அவரது மனைவி, தாயார், குழந்தைகள் முன்பாக தூக்கில் இட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் 2021ம் ஆண்டு டிசம்பர் 19 தேதி நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கேரளவில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கினார்.
இவர்கள் 15 பேரும் பி.எப்.ஐ கட்சியை சேர்ந்தவர்கள். இந்த கட்சி அல்லது அமைப்பு 2022ம் ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த 15 குற்றவாளிகள் நசிம், அஞ்மல்,அனூப், மொஹமத் அஸ்லாம், அப்துல் கலாம், சப்பாருதீன், மன்ஷத், ஜபீப்ராஜா. நவாஸ், சமீர், சாகிர் ஹுசைன், ஷாஜி, செர்நாஸ் அஷ்ரப்.
இந்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக இருப்பதாக ரஞ்சித்யின் மனைவி லிஷா தெரிவித்துள்ளார். “ எங்களுக்கு முன்பாக எனது கணவவரை மோசமாக தாக்கினார்கள். இந்த தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த 15 பேரில் 8 பேர், இந்த கொலையில் நேரடியாக தொடர்பு கொண்வர்கள். இவர்கள்தான் நேரடியாக அவரை கொலை செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil