scorecardresearch

கொடியேரி பாலகிருஷ்ணன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோவில் அனுமதி

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோவில் அனுமதி

கொடியேரி பாலகிருஷ்ணன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோவில் அனுமதி

Kerala CPM leader Kodiyeri Balakrishan admitted Chennai Apollo hospitals with Air Ambulance: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாததால், ஏகேஜி சென்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வெடுத்து வந்தார். பின்னர், மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: 21 ஆண்டுகளுக்குப் பிறகு காங். தலைவர் பதவிக்கு ஓபன் போட்டி; காரியக் கமிட்டியில் தேதி முடிவு

இந்தநிலையில், கொடியேரி பாலகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அப்பல்லோ மருத்துவமனையின் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை திருவனந்தபுரத்திற்கு சென்றது. அதேநேரம், பயணத்திற்கான ஏர் ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இதனையடுத்து காலை, 10:30 மணிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் கொடியேரி பாலகிருஷ்ணன். அவருடன் அவரது மனைவி வினோதியும் வந்துள்ளார்.

முன்னதாக கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னை புறப்படுவதற்கு முன்பாக, முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள் வீணா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், பொலிட்பீரோ உறுப்பினர் எம்.ஏ.பேபி, முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.பாலன், எம்.விஜயகுமார் ஆகியோர் அவரைச் சந்தித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kerala cpm leader kodiyeri balakrishan admitted chennai apollo hospitals with air ambulance