சுவையான மாட்டிறைச்சி சமையல் செய்முறைக்கு இந்து மகாசபையின் இணையத்தை பாருங்கள்

கேரள வெள்ளம் குறித்து சர்ச்சையான வகையில் மகாசபையின் தலைவர் பேசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விபரீதம்

இந்து மகாசபா இணையம் : அகில இந்திய இந்து மகாசபாவின் இணையதளம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட இணைய தளத்தில் கேரள நாட்டு ஸ்டைலில் எப்படி மாட்டிறைச்சி சமைப்பது என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள் கேரளவை சேர்ந்த கேரளா சைபர் வாரியர்ஸ் என்ற ஹேக்கிங் டீம்.

நூறாண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டு 14 மாவட்டமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் 14 லட்சம் நபர்கள் இந்த வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்து மகாசபா தலைவரின் சர்ச்சை பேச்சு

300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணியும் கட்டுமானப் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அகில பாரதிய இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ராபாணி கேரள வெள்ளம் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்தார்.

“மாட்டிறைச்சி உண்பவர்களால் தான் இப்படி மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு அதில் மக்கள் இறந்துவிட்டனர். மாட்டிறைச்சியை உண்பவர்கள் தவிர்த்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.

To read this news in Malayalam 

அதிகாரப்பூர்வ இணையம் முடக்கம்

அதன் விளைவாக கேரளாவை சேர்ந்த கேரளா சைபர் வாரியர்ஸ் என்ற ஹேக்கிங் டீம் அகில பாரதிய இந்து மகாசபா இணையத்தினை முடக்கி அதில் சுவையான கேரளா ஸ்டைல் மாட்டிறைச்சி சமைத்து உண்பது எப்படி என்று பதிவு செய்துள்ளனர். மேலும் மாட்டிறைச்சி உண்பவர்கள் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்ட சக்ரபாணிக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close