கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 18 வயது தலித் பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக 62 பேர் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 6 arrested after Kerala Dalit girl claims she was sexually abused by 62 people over 5 years
"இது தொடர்பாக இரண்டு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தகவல்களை ஆராய்ந்த பின்னர், மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும். இந்த வழக்கை காவல் துணை கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார்" என பத்தனதிட்டா காவல்துறை கண்காணிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
கேரள மகிளா சமக்யா சொசைட்டியின் தன்னார்வலர்கள் மூலமாக இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் மாவட்ட அளவிலான தடகள வீராங்கனையை, இந்தக் குழுவின் தன்னார்வலர்கள் சந்தித்து பேசிய போது, அப்பெண் தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இத்தகவலறிந்த தன்னார்வலர்கள், மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு புகாரளித்துள்ளனர்.
பத்தனம்திட்டாவின் குழந்தைகள் நல அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் வழக்கறிஞர் ராஜீவ், இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தனது தாயாருடன் வந்து புகாரளிக்குமாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அறிவுறுத்தினேன். மனநல நிபுணரின் ஆலோசனைகள் அப்பெண்ணுக்கு வழங்கப்பட்டன. தனது 13 வயதில் இருந்து தான் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்" என வழக்கறிஞர் ராஜீவ் கூறியுள்ளார்.
இந்த பாலியல் வன்கொடுமை குறித்து தனது குடும்பத்தினருக்கு தெரியாது என அப்பெண் கூறியதாக ராஜீவ் தெரிவித்துள்ளார். "தனது தாயாரிடம் இச்சம்பவங்கள் குறித்து அப்பெண் பகிர்ந்து கொள்ளவில்லை. மாவட்ட அளவிலான தடகள வீராங்கனையாக இருப்பதால், அப்பெண் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் இத்தனை ஆண்டுகள் கலந்து கொண்டிருப்பார். இதனால் பல அடுக்கடுக்கான பாலியல் வன்கொடுமைக்கு அப்பெண் ஆளாகி இருக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
"தனது தந்தையின் செல்போனையே அப்பெண் பயன்படுத்தி வந்தார். அவரது தந்தை மதுவிற்கு அடிமையானவர். அந்த செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை பயன்படுத்தும் நபர்கள் பலர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்" என ராஜீவ் கூறியுள்ளார்.
"நிர்பயா திட்டத்துடன் தொடர்புடைய மனநல நிபுணர்கள், அப்பெண்ணுடன் பேசினர். பாதிக்கப்பட்ட பெண் கூறும் தகவல்களில் இருக்கும் நம்பகத்தன்மையை கண்டறியும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது தான், அப்பெண்ணுடைய தந்தையின் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை பயன்படுத்தும் நபர்கள், அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது, குழந்தைகள் நல அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறார்" என ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.
"நிர்பயா திட்டத்துடன் தொடர்புடைய உளவியலாளர்கள் அவளிடம் பேசினர், அவளது கூற்றுகளின் நம்பகத்தன்மையைக் கண்டறிய. துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பெயர்களைக் கண்டறிய அவரது தந்தையின் மொபைல் போனையும் அவர்கள் ஆய்வு செய்தனர். விசாரணை முன்னேறியதும், மேலும் பலர் சம்பந்தப்பட்ட வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது,” என்று கூறிய அவர், “சிறுமியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, CWCயின் கீழ் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.