அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்றது தொடர்பாக, கேரள வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முக்கிய விபரங்கள் ஏதும் புலப்படவில்லை. ஏனெனில், யானைக்கு காயம்பட்டு 2 வாரங்களுக்கு பின்னரே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை, காயத்துடன் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ள நிலையில், இந்த குற்றத்தை செய்தவர்கள் யார் என்பதை கண்டறிவதில் வனத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த யானையை தான் முதல்முறை பார்க்கும்போதே ஏதோ காயம்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆனால், எந்தவித காயம் என்பதை என்னால் எப்போது யூகிக்க முடியவில்லை என்று மன்னார்கட் பகுதி வன அதிகாரி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு காயம்பட்டது எப்படி என்பதை எளிதாக கண்டறிய முடியாது. ஏனெனில் அது ரிமோட் பகுதி. இந்த விவகாரத்தில் வனவிலங்கு ஆர்வலர்களோ அல்லது உள்ளூர் மக்களோ தகவல் அளித்தால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும் என அவர் மேலும் கூறினார்.
கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக யானைக்கு வெடிபொருட்கள் நிரப்பிய அன்னாசி பழம் தரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், அப்பகுதியில் காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் அடிக்கடி வெடிவைத்து கொல்லப்பட்டு வருகின்றன. கேரளாவில் இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி நடப்பதுதான். காட்டு யானைகளை கொல்வதற்கென்றே, தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் பலர் சட்டவிரோதமாக சுற்றிவருகின்றனர்.
வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படி வைக்கப்பட்ட பழத்தை தான் இந்த யானை தவறுதலாக தின்றிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
யானைகள் நாள்தோறும் 100 கி.மீ வரை நடக்கும் திறன் கொண்டவை. இதனால், அந்த யானைக்கு எந்த இடத்தில் பழம் சாப்பிட்டது என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த விவகாரத்தில் க்ளு தேடிவருவதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
காட்டுப்பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் முன்புதான் நடைபெற்று வந்தன. தற்போது தாங்கள் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருவதால், இத்தகைய சம்பவங்கள் குறைந்துள்ளன. எனது கட்டுப்பாட்டிலான பகுதியில் இத்தகைய சம்பவங்கள் ஒன்றுகூட நடக்கவில்லை என்றே கூறுவேன் என்று துணை வன அதிகாரி சசி குமார் தெரிவித்துள்ளார்.
இந்த கொடும்செயலை செய்தவர்கள் மாட்டும்பட்சத்தில் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் வனவிலங்கு ஆர்வலர் டாக்டர் ஈசா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செயலை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. வனவிலங்குகளை கொல்ல துணிந்த இவர்களுக்கு மனிதர்களை கொல்ல எவ்வளவு நேரம் ஆகிவிடும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
யானை மரணமடைந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த யானை கடந்த 23ம் தேதி சைலன்ட் வேலி பூங்கா பகுதியில் காணப்பட்டது. அப்போதே அது மிகவும் சோர்வாகவே காணப்பட்டது. காயம் பட்டதால், அது அதனுடைய கூட்டத்திலிருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டது. என்று வன அதிகாரி சாமுவேல் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
யானை வெடிபொருட்கள் நிரம்பிய பழத்தை உண்டு அதனால் ஏற்பட்ட காயத்தினால் மரணமடைந்த நிகழ்வு குறித்து வன அதிகாரி மோகன் கிருஷ்ணன், மே 30ம் எழுதிய பேஸ்புக் பதிவினாலேயே வெளிச்சத்திற்கு வந்தது.
அதிரடிப்படை நிகழ்வின் ஒருபகுதியாக, கிருஷ்ணன், வெள்ளியார் ஆற்றில் நின்று கொண்டிருந்த 15 வயது யானையை மீ்ட்கும்போது அந்த யானை சிறிதுசிறிதாக நீரில் மூழ்கி வருவது கண்டார். இதனையடுத்து கும்கி யானைகளின் உதவியுடன் அதை மீட்க முயன்றார். பலகட்ட போராட்டத்திற்கு பிறகு யானை மீட்கப்பட்டது. அதற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தபோது அது சிகிச்சை பலனின்றி மே 27ம் தேதி மரணமடைந்தது.
யானையை போஸ்ட்மார்ட்டம் செய்த கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறியதாவது, சாப்பிட்ட பழத்தில் இருந்த பட்டாசுகள் வெடித்தினால், யானையின் மேல் மற்றும் கீழ்ப்புற உதடுகள் மிகுந்த சேதமடைந்துவிட்டன. அப்பகுதியில் அதிகளவில் புழுக்கள் தங்கிவிட்டதனால், அதனால் எந்தவகை உணவையும் சாப்பிட முடியவில்லை, பலநாட்கள் சாப்பிடாததால் அது மிகவும் சோர்வான நிலையிலேயே இருந்துவந்ததாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.