கேரளா மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் 91 வயது தாமஸ் குஞ்சவரச்சன் மற்றும் அவருடைய மனைவி 88 வயது மரியம்மா. இவர்கள் இருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்விரு நபர்களுக்கும் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையில், அந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணியாற்றி வந்தார் செவிலியர் ரேஷ்மா. கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 12 முதல் 22 வரை அவர் பணியாற்றினார்.
தாமஸ் குஞ்சவரச்சன் மற்றும் மரியம்மா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது
இந்த 10 நாட்களிலும் இந்த இரண்டு வயதானவர்களை தன்னுடைய சொந்த பெற்றோர்களை போல் அவர் கவனித்துக் கொண்டார். 10 நாள் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய செவிலியர் ரேஷ்மாவுக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
நேற்று, அந்த வயதானவர்களுடன் இவரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார். கேரளாவில், இந்த நோயில் இருந்து மீண்ட அதிக வயதானவர்கள் இவர்கள் தான். வீடு திரும்பிய செவிலியர் ரேஷ்மாவுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில் 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு மீண்டும் கொரோனா வார்டில் பணி புரிய விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் வெகு விரைவில் கேரளா, கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : இந்தியா சரியான நேரத்தில் சிறப்பான முடிவை எடுத்துள்ளது – வாழ்த்திய WHO!