கேரளா வெள்ளம் : கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மேலும் அதிகமாகியிருக்கும் வெள்ளப்பெருக்கினால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளா வெள்ளம் : இயற்கையின் கோரத் தாண்டவம்:
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை இந்த வெள்ளத்தினால் 324 பேர் பலியாகியுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று (வியாழக்கிழமை) மட்டுமே சுமார் 30 பேர் இறந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/kerala-7598.jpg)
இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்தினால், லட்சக்கணக்கானோர் தங்களின் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். கேரளா வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக இதுவரை 339 மோட்டார் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/Dkyc18YW4AEzShZ.jpg)
தற்போது கூடுதலாக 72 மோட்டார் படகுகளையும் மீட்பு களத்தில் இறக்கியுள்ளதாக பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கொச்சி ஆகிய பகுதிகளில் பேரிடர் விமான படை கொண்டு மக்களை மீட்டு வருகின்றனர். இதுபோல் வெள்ளப்பகுதியில் சிக்கியிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பனிக்குடம் உடைந்து வலி ஏற்பட்டது. உடனே அப்பகுதிக்கு வந்த பேரிடர் மீட்பு குழு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவர் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு சிகிச்சை அளித்தது.
August 2018
பின்னர் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாய் மகன் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை மற்றும் பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
August 2018
கேரளா வெள்ளம் குறித்து இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
அப்போது, எர்ணாகுளம், இடுக்கி, கோழிகோடு, கண்ணூர், திரிசூர், வயநாடு ஆகிய பகுதிகள் பலத்த சேதங்களை சந்தித்துள்ளதாக கூறினார்.
மேலும் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் கூடுதலாக 23 ஹெலிகாப்டர்கள் மற்றும் 200 மோட்டார் படகுகள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.